பாடம் 2 : குடும்பம்

அ . . . ஒலியுடன் சொற்களை வாசிப்போம்.

அம்மா
அப்பா
அக்கா
அண்ணா



க ச த ந ப ம வ ட ங ர

கண்
சட்டி
தம்பி
நரி
படம்
மரம்
வண்டி


ண ய ல ழ ள ற ன

பணம்
முயல்
மலர்
பழம்
வள்ளம்
பறவை
அன்னம்



சேர்ந்து பாடுவோம்.

அம்மா அப்பா ஆனவரே!

ஆடை அணிகள் அளிப்பவரே!

இனிய உணவும் தருவீரே!

ஈசன் பாதம் தொழுவோமே.

உண்போம் உடுப்போம் உவந்திடுவோம்.

ஊஞ்சல் ஆடிப் பாடிடுவோம்.

எண்ணும் எழுத்தும் படித்திடுவோம்.

ஏவாமற் பணி செய்திடுவோம்.

ஐந்தும் இரண்டும் கற்றிடுவோம்.

அன்பாய்க் கூடி நடித்திடுவோம்.

ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம்.

ஓடிப்பாடி நடித்திடுவோம.

ஒளவைப் பாடல் படித்திடுவோம்.