பச்சைக் கிளியே வா வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா.
கவலை எல்லாம் நீங்க வா
களைப் பொழிந்து போகவே
பவளவாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பையப் பறந்து வா
பாடிப்பாடிக் களித்து வா
கையில் வந்திருக்க வா.
கனியருந்த ஓடி வா