கீரை | சீப்பு | தீ | நீலம் | பீர்க்கு |
மீன் | வீடு | தண்ணீர் | தேனீ |
தோட்டத்திலே ஆட்டுக்குட்டி
துள்ளிக் குதிக்குதாம்
தாயின் மடியில் பாலைத் தேடித்
தாவி ஓடுதாம்.
அம்மா என்று சத்தமாகப்
பசுவும் கத்தவே
கன்றுக்குட்டி தாயைத் தேடிப்
பாய்ந்து ஓடுதாம்
எட்டுக் காலில் நடந்து நண்டு
எங்கு போகிறார்
எட்டி இடம் வலமும் பார்த்து
எடுப்பாய் ஓடுறார்.