பாடம் 9 : ஏ ... ஒலியுடன் சொற்களை வாசிப்போம்.

ஏடு
ஏணி
ஏரி
ஏழு




கே சே தே நே பே மே வே ரே

கேணி
தேர்
பேனா
வேடன்
சேவல்
நேசன்
மேளம்
ரேவதி




சொற்பயிற்சி:

தேன் மேசை பேச்சு
நேரம் வேட்டி கேள்வி
பேன் வேலி தேடல்
தேங்காய் தேயிலை வேலை

ஒருமை பன்மைச் சொற்களைக் கற்போம்.

ஒருமை பன்மை
பூ பூக்கள்
கண் கண்கள்
கால் கால்கள்
படம் படங்கள்
புத்தகம் புத்தகங்கள்
பேனா பேனாக்கள்
கதிரை கதிரைகள்
சேவல் சேவல்கள்




சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

தாமரைப் பூவே சாய்ந்தாடு


மாடப் புறாவே சாய்ந்தாடு

மானே தேனே சாய்ந்தாடு


கொஞ்சுங் கிளியே சாய்ந்தாடு

குத்து விளக்கே சாய்ந்தாடு


மாணிக்க மலையே சாய்ந்தாடு

மரகத மணியே சாய்ந்தாடு


கட்டிக் கரும்பே சாய்ந்தாடு

கற்பகக் கொம்பே சாய்ந்தாடு


சோலைக் குயிலே சாய்ந்தாடு

சோபன வாழ்வே சாய்ந்தாடு


அன்பே யின்பே சாய்ந்தாடு

ஆச்சி மடியிற் சாய்ந்தாடு