குடை | மரை | தங்கை | காலை |
வடை | தரை | மங்கை | மாலை |
படை | கரை | முழங்கை | .சீலை |
ஆடு | குயில் | கால் | சாடி |
பாடு | மயில் | வால் | மூடி |
மாடு | துயில் | பால் | .தாடி |
படம் | கண் | நாய் | யானை |
மடம் | மண் | காய் | பானை |
குடம் | எண் | வாய் | .பூனை |
இந்தியாவின் தென் பாகத்திலே தென்னாலி என்னும் ஒரு சிறிய ஊர் உண்டு. முன்னொரு காலத்தில் அங்கே இராமன் என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் ஒரு விகடகவி. தனது பேச்சாலும், செயலாலும் எல்லோரையும் சிரிக்க வைப்பான். அவனது பெயரையும் பிறந்த ஊரையும் சேர்த்து தென்னாலிராமன் என்று எல்லோரும் அழைத்தார்கள்.
இந்தியாவின் தென் பாகத்திலே தென்னாலி என்னும் ஒரு சிறிய ஊர் அந்த ஊரை இராயன் என்ற அரசன் அரசாண்டு வந்தார். தென்னாலிராமனின் திறமைகளை அறிந்து அவனைத் தனது அரண்மனையில் இருக்க ஒழுங்குகள் செய்தார். ஒருநாள் அரசர் தனது மந்திரிகளுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது தென்னாலிராமன் அங்கே வந்தான். அவனை அறியாமல் ஏதோ பேசிவிட்டான். அதனைக் கேட்ட அரசர் கோபம் கொண்டார். “சமயம் அறிந்து பேசு! நீ இனிமேல் இங்கே உன் தலையைக் காட்டாதே” என்று கோபமாகக் கூறினார்.
அதன் பின்னர் தென்னாலிராமன் இரண்டு மூன்று நாட்களாக அரச சபைக்குப் போகவில்லை. பின்பு ஒருநாள் அரச சபை கூடியிருக்கும் நேரத்திலே அங்கே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. யாரோ ஒருவன் தலையில் பானையைக் கவிழ்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். பார்வை தெரிவதற்காக மட்டும் இரண்டு ஓட்டைகள் செய்திருந்தான். “யார் இந்தக் கோமாளி?” என்று அரசர் இராயன் கேட்டார். அந்தப் பானைத் தலையன் அவரிடம் நேரே வந்து “அரசே! நீங்கள்தான் இனிமேல் இங்கே என் தலையைக் காட்டக்கூடாது என்று கூறினீர்கள். தங்கள் உத்தரவுப்படி நடக்கவேண்டும் என்பதற்காகவே இப்படி வந்தேன்” என்று கூறினான். அரசருக்கும், மற்றவர்களுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. “சரி சரி நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். முதலில் தலையிலிருந்து பானையை எடு” என்றார் இராயன்.