கொக்கு வெள்ளை நிறம் | |
காகம் கறுப்பு நிறம் | |
வானம் நீல நிறம் | |
தக்காளிப்பழம் சிவப்பு நிறம் | |
இலை பச்சை நிறம் | |
மாம்பழம் மஞ்சள் நிறம் | |
கத்தரிக்காய் ஊதா நிறம் |
பலூன் வாங்குவோம் - நாம்
பலூன் வாங்குவோம்
வண்ண வண்ணப் பலூன் வாங்கி
ஆடிப் பாடுவோம் - பலூன்
பச்சை நிறப் பலூன் - இது
பாங்காக ஊதுவோம்
மஞ்சள் நிற பலூன் இது
மாயவித்தை காட்டுவோம் - பலூன்
சிவப்பு வண்ண பலூனாம்
சிரித்து நாங்கள் ஊதுவோம்
நீல வண்ணப் பலூனாம்
நீளமாக ஊதுவோம் - பலூன்
கறுப்பு வெள்ளை ஊதா
கண்ணைக் கவரும் வண்ணங்கள்
கொத்துக் கொத்தாய்த் தொங்குமே
கோலவித்தை காட்டுமே - பலூன்
- மனே