1. திங்கட்கிழமை
2. செவ்வாய்க்கிழமை
3. புதன்கிழமை
4. வியாழக்கிழமை
5. வெள்ளிக்கிழமை
6. சனிக்கிழமை
7. ஞாயிற்றுக்கிழமை
நேற்று | இன்று | நாளை |
காலை | மாலை | இரவு |
பாக்கு | குதிரை | மெத்தை | பூச்சி |
விளக்கு | கதிரை | நத்தை | தாச்சி |
எழுத்து | வள்ளம் | செருப்பு | மாதம் |
கழுத்து | பள்ளம் | நெருப்பு | பாதம் |
முறுக்கு | கரும்பு | பறவை | பொம்மை |
சறுக்கு | திரும்பு | சிறுத்தை | குழந்தை |
1)இன்று என்ன கிழமை? ..................................
2)நேற்று என்ன கிழமை? ..................................
3)நாளை மறுநாள் என்ன கிழமை? ..................................
4)இன்று புதன்கிழமை என்றால் நேற்று என்ன கிழமை? ..................................
5)வாரத்தின் முதல் நாள் எது? ..................................
6)இந்துக்கள் கோவிலுக்குச் செல்லும் முக்கியமான நாள் எது? ..................................
7)இஸ்லாம் மக்கள் மசூதிக்குச் செல்லும் ஒரு நாள் எது? ..................................
8)கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் செல்லும் ஒரு நாள் எது? ..................................
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சிறிய ஆட்டுக்குட்டி இருந்தது. அது தண்ணீர் குடிக்க நீரோடைக்கு வந்தது. அங்கே எதிர்க்கரையில் ஓர் ஓநாய் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. ஓநாய் ஆட்டுக்குட்டியைக் கண்டது. ஓநாயின் நாக்கில் நீர் ஊறியது. "ஆகா.......! என்ன அழகான குட்டி சுவைத்துச் சாப்பிடலாமே" என்று நினைத்தது.
"ஏன் தண்ணீரைக் கலக்குகிறாய்?" என்று ஓநாய் கேட்டது. அதற்கு ஆட்டுக்குட்டி "நான் இங்கே நிற்கிறேன். எப்படி நான் உங்கள் தண்ணீரைக் கலக்க முடியும்" என்று கேட்டது.
"நீ கலக்காவிட்டால் வேறு யார் கலக்கியிருப்பார்கள்? உன் அப்பாவோ பாட்டனோ கலக்கியிருப்பார்கள்." என்று ஓநாய் கேட்டது. கோபத்துடன் ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்தது ஓநாய். அதனைக் கொன்று தின்றது.
பிள்ளைகளே! “துட்டனைக் கண்டால் தூர விலகு” என்பதனை நாம் மறவாது வாழ வேண்டும்.