கிரிசாம்பாள் கிரிசாம்பாள் கிரிசாம்பாள் கிரிசாம்பாள் ஓர் அமைதியான சிறுமி. அவள் எல்லோரோடும் இனிமையாகப் பேசுவாள். பண்பாக நடப்பாள். ஒருநாள் அருகில் உள்ள ஒரு கோவிலில் மோதகம் அவித்துச் சிறுவர்களுக்குக் கொடுத்தார்கள். ஒவ்வொரு சிறுவர்களையும் ஒவ்வொன்றை எடுக்கும்படி கூறி ஒரு பெட்டியில் வைத்தார்கள்.
எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு ஓடிப்போய் பெரிய பெரிய மோதகங்களாகப் பார்த்து எடுத்தார்கள். அதுவரை அமைதியாக இருந்த கிரிசாம்பாள் இறுதியாக இருந்த சிறிய மோதகத்தை எடுத்தாள். அதனைப் பிரித்ததும் அதற்குள் ஒரு தங்கக்காசு இருப்பதைக்கண்டாள். யார் பொறுமைசாலி என்பதை அறிவதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்பதை எல்லோரும் அப்போதுதான் அறிந்தார்கள்.
பிள்ளைகளே! நாம் எப்போதும் பண்பாகவும், ஒழுங்காகவும், அமைதியாகவும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
விசிறி | கட்டில் | தொலைபேசி |
கிண்ணம் | மெத்தை | குத்துவிளக்கு |
கண்ணாடி | தலையணை | மணிக்கூடு | .
யன்னல் | அலுமாரி | கணினி | .
பூ - மலர் | தாய் - அன்னை |
பழம் - கனி | தந்தை - தகப்பன் |
வீடு - இல்லம் | வளையல் - காப்பு |
மணிக்கூடு - கடிகாரம் | சூரியன் - கதிரவன் |
கதிரை - நாற்காலி | சந்திரன் - மதி |