பாடம் 21 : எண்கள்

வாசிப்போம்.

ஒன்று ஆறு
இரண்டு ஏழு
மூன்று எட்டு
நான்கு ஒன்பது
ஐந்து பத்து




வாசிப்போம் வினவுவோம்

ஒரு பூ
இரண்டு இலைகள்
மூன்று பூனைகள்
நான்கு தொப்பிகள்
ஐந்து விளக்குகள்
ஆறு மூடிகள்
ஏழு நாய்கள்
எட்டு பந்துகள்
ஒன்பது பானைகள்
முட்டைகள்




வாசிப்போம்

ஒரு வாய்
இரண்டு கண்கள்
மூன்று மீன்கள்
நான்கு கதிரைகள்
ஐந்து பறவைகள்
ஆறு யானைகள்
ஏழு பட்டங்கள்
எட்டு வாத்துகள்
ஒன்பது பந்துகள்
பத்து குதிரைகள்




இது ஒரு பந்து.

இவை இரண்டு பந்துகள்

அது ஒரு பூனை.

இவை நான்கு பூனைகள்





பாடி மகிழ்வோம்.

எலி இராசன் வீட்டில் ஒரு கலியாணம் நடந்ததாம்

ஓரெலி ஓடிப்போய் ஊருக்கெல்லாம் சொன்னதாம்

இரண்டெலி கூடி வந்து மஞ்சள் அரைத்ததாம்

மூன்றெலி முந்தி வந்து முக்காலி போட்டதாம்

நான்கெலி நாடி வந்து பந்தற்கால் போட்டதாம்

ஐந்தெலி ஓடி வந்து குத்துவிளக்கு ஏற்றிற்றாம்

ஆறெலி சேர்ந்து நின்று அரசாணி நட்டதாம்

ஏழெலி கூடி நின்று ஓமம் வளர்த்ததாம்

எட்டெலி கூடி நின்று கொட்டுமேளம் கொட்டிற்றாம்

ஒன்பதெலி ஒன்றாய் இருந்து பந்திபோட்டு உண்டதாம்

பத்தெலி பாடிப்பாடி ஒய்யாரமாய் ஆடிற்றாம்

வந்த எலிகள் ஒன்று சேர்ந்து வாழ்த்துப் பாடிற்றாம்.





பாடி மகிழ்வோம்.

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்தபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை ஏற்று உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்டபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்டபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே