பாடம் 2 : ஒலிகள்

சேர்ந்து பாடுவோம்.



உரத்து வாசிப்போம்.

காகம், காகம் கா... கா... கா... கா... கா... என்று கரைந்திடுமே.
கிளிகள், கிளிகள் கீ... கீ... கீ... கீ... கீ... என்று கத்திடுமே.
குயில்கள், குயில்கள் கூ...ஊ... கூ...ஊ... கூ... ஊ... கூ... ஊ... என்று கூவிடுமே.
சேவல், சேவல் கொக்... கொக்.... கொக்... கொக்கரக்கோ என்று கூவிடுமே.
பூனை, பூனை மியாவ்... மியாவ்.... மியாவ்... மியாவ்.. மியாவ்.... என்று கத்திடுமே.
நாய்கள், நாய்கள் வவ்... வவ்....வவ்... வவ்... வவ்.... என்று குரைத்திடுமே.
சிங்கம், சிங்கம் கர்ர்... கர்ர்.... கர்ர்... கர்ர்... கர்ர்.... என்றே கர்ச்சிக்குமே.


உரத்து வாசிப்போம்.

நாய் குரைக்கும்.

காகம் கரையும்.

சிங்கம் கர்ச்சிக்கும்.

கரடி உறுமும்.

பூனை கத்தும்.

கிளி பேசும்.

நரி ஊளையிடும்.

மயில் அகவும்.

சேவல் கூவும்.

குயில் கூவும்.

குருவி கீச்சிடும்.

புலி உறுமும்.

யானை பிளிறும்.

கோழி கொக்கரிக்கும்.

ஆடு கத்தும்.

மாடு கதறும்.

வண்டு ரீங்காரமிடும்.

கழுதை கத்தும்.

ஆனால், மனிதரோ பேசுவர், சிரிப்பர், அழுவர், பாடுவர், முணுமுணுப்பர், கத்துவர், வாசிப்பர், ஓதுவர், சொல்லுவர், கூறுவர், கதறுவர், அலறுவர்.

உரத்து வாசிப்போம்.

பசுக் கன்று.
நாய்க் குட்டி.
கோழிக் குஞ்சு.
குருவிக் குஞ்சு.
ஆட்டுக் குட்டி.
அணில் பிள்ளை.


இளமைப் பெயர்கள்

ஆடு - குட்டி
புலி - குட்டி
குரங்கு - குட்டி
பூனை - குட்டி
சிங்கம் - குட்டி
பாம்பு - குட்டி
குதிரை - குட்டி
நாய் - குட்டி
யானை - கன்று, குட்டி
மான் - கன்று
தென்னை-கன்று
வாழை - கன்று, குட்டி
மாடு - கன்று
பலா - கன்று
ஆடு கத்தும்.
மாடு கதறும்.
மா - கன்று
கிளி - குஞ்சு
எலி - குஞ்சு
காக்கை - குஞ்சு
கோழி - குஞ்சு
மீன் - குஞ்சு
பனை - வடலி
மீன் - குஞ்சு
நெல் - நாற்று
மாந்தர் - குழந்தை,பிள்ளை,
பூச்சி - புழு, குடம்பி