ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை... ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக் கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக் கூழ் குடிப்போமே. - நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - நவாலியூர் சோமசுந்தரப் புலவர் உலக நீதி ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடம் தனிலே போகவேண்டாம் போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம் மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம் மாற்றானை உறவென்று நம்பவேண்டாம் தனம்தேடி உண்ணாமல் புதைக்கவேண்டாம் தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம் சினம்தேடி அல்லலையும் தேடவேண்டாம் சினந்திருந்தார் வாசல்வழிச் செல்லவேண்டாம் சேராத இடந்தனிலே சேரவேண்டாம் செய்நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம
மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் ஆளில் லாத வேளையில் அடுக்க ளைக்குள் செல்லுவார் பால் இருக்கும் சட்டியைப் பார்த்துக் காலி பண்ணுவார் மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் இரவில் எல்லாம் சுற்றுவார் எலிகள் வேட்டை ஆடுவார் பரணில் ஏறிக் கொள்ளுவார் பகலில் அங்கே தூங்குவார் மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் மெல்ல மெல்லச் செல்லுவார் மேலும் கீழும் தாவுவார் “லொள் லொள்” சத்தம் கேட்டதும் நொடியில் ஓடிப் பதுங்குவார். மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார்
ஒளவையார் ஒளவைக் கிழவி நம் கிழவி, அமுதின் இனிய சொற்கிழவி செவ்வை நெறிகள் பற்பலவும் தெரியக் காட்டும் பழங்கிழவி நெல்லிக் கனியைத் தின்றுலகில் நீடு வாழும் தமிழ்க்கிழவி வெல்லற் கரிய மாந்தரெல்லாம் வியந்து போற்றும் ஒருகிழவி கூழுக் காகக் கவிபாடும் கூனக் கிழவி அவளுரையை வாழும் வாழ்வில் ஒருநாளும் மறவோம் மறவோம் மறவோமே !
தலைவாரிப் பூச்சூடி உன்னை... தலைவாரிப் பூச்சூடி உன்னை - பாட சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை சிலை போல ஏனங்கு நின்றாய் - நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்? விலை போட்டு வாங்கவா முடியும் - கல்வி வேளை தோறும் கற்று வருவதால் படியும் மலை வாழை அல்லவோ கல்வி - நீ வாயார உண்ணுவாய் வா என் புதல்வி படியாத பெண்ணாய் இருந்தால் - கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால் கடிதாய் இருக்கும் இப்போது - கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது கடிகாரம் ஓடு முன் ஓடு - என் கண்ணல்ல அண்டை வீட்டுப் பெண்களோடு - பாரதிதாசன் ; தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு... தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி அம்மா என்குது வெள்ளைப் பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி
அம்மா நான் விளையாடப் போறேன்... அம்மா நான் விளையாடப் போறேன் - கையில் அன்புடன் பட்சணம் தந்தனுப் பென்னை சும்மா நான் உட்கார மாட்டேன் - நல்ல தோழர் அழைக்கின்றார் நாழிகை ஆச்சு கிட்டி புள் அடித்து ஆடிப் - பின் கண்கட்டி ஓடிப்பிடித்து மகிழ்வோம் வேப்ப மரத்தடி மண்ணில் - சிறு வீடுகள் கட்டி விருந்துகள் செய்வோம் பாட்டுக் கச்சேரிகள் செய்வோம் - நான் பாடுவேன் மத்தளம் போடுவான் கிட்டு கேட்டுச் ~சபாஷ்| எனச் சொல்வார் - பின்பு கிண்கிணி கட்டி நடனங்கள் செய்வோம் வேட்டிகளால் திரை கட்டிப் - பல வேடங்கள் போட்டொரு நாடக மாடிக் காட்டுவோம் பாரதக் காட்சி - நான் கண்ணனின் சொற்படி காண்டீப னாவேன் (காண்டீபன் அருச்சுனனின் மறுபெயர்)