பாடம் 7: கை வீசம்மா கைவீசு

கை வீசம்மா கைவீசு

கை வீசம்மா கைவீசு


கடைக்குப் போகலாம் கைவீசு

கண்ணால் பார்க்கலாம் கைவீசு


சொக்காய் வாங்கலாம் கைவீசு

சொகுசாய்ப் போகலாம் கைவீசு


பள்ளிக்குப் போகலாம் கைவீசு

பாடம் படிக்கலாம் கைவீசு


கோயிலுக்குப் போகலாம் கைவீசு

கும்பிட்டு வரலாம் கைவீசு