பாடம் 8: பொங்கல் விழா

விடியும் போதே குளித்துவிட்டு

விளக்கு ஒன்றை ஏற்றிவைத்துக்

கோலமிட்டு பானையில்

கொத்து மஞ்சள் கட்டிவைத்து

அந்தப் பானை தன்னைத் தூக்கி

அடுப்பில் வைத்துப் பாலை ஊற்றிப்

பொங்கிப் பாலும் வருகையிலே

பொங்கலோ பால் பொங்கலென்போம்.


1)தைப்பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?

2) பொங்கலுக்குத் தேவையான பொருட்களைக் கூறுக.

3) அவற்றின் பெயர்களைக் கூறுக.

4) அவற்றின் நிறங்களைக் கூறுக.

5) அவற்றை எங்கே வாங்கலாம்?

6) பொங்கலன்று நாம் என்னென்ன செய்கிறோம்?