பாடம் 12 : ஓ ... ஒலியுடன் சொற்களை வாசிப்போம்.

ஓடு
ஓலை
ஓடம்
ஓநாய்




கோ சோ தோ போ மோ

கோழி
சோளம்
தோடை
கோடரி
சோறு
தோடு
போத்தல்
மோதிரம்




ஒள ... ஒலியுடன் சொற்களை வாசிப்போம்.

ஒள வெள பௌ

ஒளவையார்
ஒளடதம்
வெளவால்
பௌர்ணமி




சொற்பயிற்சி :

ஓசை கோடு கோயில் மோர்
ஓவியம் நோய் சோலை தோட்டம்
ஓணான் போர் தோசை சோளம்




சொல் ஆக்கி வாசிப்போம்.





நாய்க்குட்டி

தோ தோ நாய்க்குட்டி

துள்ளி வாவா நாய்க்குட்டி.


வெள்ளை நிற நாய்க்குட்டி

வீரமான நாய்க்குட்டி


எலியைப் பிடிக்க ஓடும்

புலியைப் போல பாயும்


திருடன் வந்தால் குரைக்கும்

லொள்! லொள்! லொள்!


வாலை வாலை ஆட்டும்

பாலைப் பாலைக் குடிக்கும்


நன்றியுள்ள நாய்க்குட்டி

நான் வளர்க்கும் நாய்க்குட்டி.