பாடம் 17 : காய்கள்



கத்தரிக்காய்

பூசணிக்காய்

வாழைக்காய்

வெண்டைக்காய்

முருங்கைக்காய்

முள்ளங்கி

கோவா

கரட்

பீற்றூட்

பயற்றங்காய்






இது கத்தரிக்காய்

நீளமான கத்தரிக்காய்

அது பூசணிக்காய்

வட்டமான பூசணிக்காய்

இது வாழைக்காய்

சீப்புச் சீப்பாய் வாழைக்காய்

அது வெண்டைக்காய்

பசுமையான வெண்டைக்காய்

இது முருங்கைக்காய்

நீளமான முருங்கைக்காய்

அது முள்ளங்கி

வெள்ளை நிற முள்ளங்கி.





பழங்கள்

மாம்பழம்
வாழைப்பழம்
அப்பிள் பழம்
திராட்சைப்பழம்
பப்பாளிப் பழம்
அன்னாசிப்பழம்

1)மாம்பழம் அழகானது.

2)வாழைப்பழம் இனிமையானது

3)தோடம்பழம் உருண்டையானது.






சுவைகள்

மாம்பழம் இனிக்கும்.

இனிப்பு

மாங்காய் புளிக்கும்.

புளிப்பு

பாகற்காய் கசக்கும்.

கசப்பு

மிளகாய் உறைக்கும்.

உறைப்பு

உப்பு உவர்க்கும்.

உவர்ப்பு

பாக்கு துவர்க்கும்.

துவர்ப்பு





வாசிப்போம்

இது யாருடைய பூனை?

இது என்னுடைய பூனை.

அது யாருடைய கிளி?

அவருடைய கிளி.

இது யாருடைய மீன்?

இது உங்களுடைய மீன்.

இது யாருடைய நாய்?

இது எங்களுடையது.

யாருடைய மீன்கள்?

இவை உங்களுடையவை.

அவை யாருடைய கோழிகள்?

அவை அவர்களுடையவை.





சேர்ந்து பாடுவோம்

தென்னை மரமே ஏன் வளர்ந்தாய்

தென்னை மரமே ஏன் வளர்ந்தாய்

தேங்காய் இளநீர் தர வளர்ந்தேன்

கத்தரிச் செடியே ஏன் வளர்ந்தாய்

காயும் பிஞ்சும் தர வளர்ந்தேன்

பூசணிக் கொடியே ஏன் வளர்ந்தாய்

பூவும் பிஞ்சும் தர வளர்ந்தேன்

மனிதா மனிதா ஏன் வளர்ந்தாய்

மாநிலம் வாழ நான் வளர்ந்தேன்.