பாடம் 1 : எனது குடும்பம்

எனது பெயர் வாணி.

இவர் எனது அப்பா.

அப்பாவின் பெயர் குமார்.

எனது அம்மா.

அம்மாவின் பெயர் சுமதி.

இவர் எனது அண்ணா.

அண்ணாவின் பெயர் கமலன்.

இவர் எனது அக்கா.

அக்காவின் பெயர் சங்கரி.

இவர் எனது தம்பி.

தம்பியின் பெயர் சுந்தர்.

இவர் எனது தங்கை.

தங்கையின் பெயர் கவிதா.

இவர் எனது தாத்தா.

தாத்தாவின் பெயர் சுந்தரம்.

இவர் எனது பாட்டி.

பாட்டியின் பெயர் சிவகாமி.

இது எங்கள் நாய்.

நாயின் பெயர் லைக்கா.

எனது பெயர் வாணி.

எனது வயது ஏழு.

நான் தமிழ் படிக்கிறேன்.

எனக்குத் தமிழ் படிக்க மிகவும் விருப்பம்.

பின்வரும் சொற்களை உரத்து வாசிப்போம்

அம்மா
அப்பா
கிளி
நாய்
பசு
பூனை


எனது குடும்பம்

எங்கள் குடும்பம் இனிய குடும்பம்.

அன்புடன் ஒன்றாய் வாழும் குடும்பம்.

பண்பைப் பழக்கும் தாத்தா பாட்டி.

அன்பைப் பொழியும் அம்மா அப்பா.

பாடம் கேட்க அண்ணா அக்கா.

ஓடிப் பிடிக்கத் தம்பி தங்கை.

எங்கள் குடும்பம் இனிய குடும்பம்.

அன்புடன் ஒன்றாய் வாழும் குடும்பம்.