பாடம் 4 : கேட்போம்: கட்டளைப்படி விளையாடுவோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கேட்போம் விளையாடுவோம்.

விடுகதைகள்

எனக்கு நான்கு கால்கள்

நடந்து செல்வேன்

எலியைப் பிடிப்பேன்

நான் யார்?

ஒளியைத் தருவேன்

இரவில் வருவேன்

வானத்தில் இருப்பேன்

நான் யார்?

வீட்டைக் காப்பேன்

வாயைத் திறப்பேன்

சாப்பிடமாட்டேன்

நான் யார?

வானத்தில் வட்டமிடுவேன்

எனக்கு வால் உண்டு

நூலுக்குக் கட்டுப்படுவேன்

நான் யார்?

நடந்து திரிவேன்

எட்டி உதைப்பேன்

தேய்ந்துபோவேன்

நான் யார்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடி மகிழ்வோம்

பாப்பா பாட்டு

ஓடி விளையாடு பாப்பா - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

சின்னஞ் சிறு குருவி போல - நீ

திரிந்து பறந்து வா பாப்பா

வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு - என்று

வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்

புறஞ் சொல்லலாகாது பாப்பா

தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு

தீங்கு வர மாட்டாது பாப்பா

- பாரதியார்