பாடம் 5: தோட்டம் செல்வோம்

ஆசிரியர் : பிள்ளைகளே! நாம் இன்று பூந்தோட்டம் பார்க்கச் செல்வோமா?

மாணவர் : ஆமாம். இப்பொழுதே புறப்படுவோம்.

மாலா : அழகான பூக்களைப் பார்க்கலாமே.

ரமேஸ் : வாசமுள்ள பூக்களும் இருக்கும் தானே!

சியாம் : பல நிறப் பூக்களையும் பார்க்கலாம்.

ரேகா : குளத்திலும் பூக்கள் பூத்திருக்கும்.

சுமி : வாருங்கள், வாருங்கள். இதோ பூந்தோட்டம் பார்த்து மகிழ்வோம்.

.

ஆசிரியர் : பிள்ளைகளே! பூந்தோட்டத்தில் உள்ள பூக்களை யாருமே பறிக்கக் கூடாது.

ஆதி : ஏன் அப்படி கூறுகிறீர்கள்?

ஆசிரியர் : பூக்களை பறித்துவிட்டால் பூக்களை இரசிக்க முடியாது. பூக்களும் வாடி விடும். மரத்தை மட்டுமே பார்க்க முடியும்.

சிவா : அதோ அழகான சிவப்பு ரோசா, அடுக்கடுக்காய் இதழ்கள்.

கீதா : இதோ மஞ்சள், வெள்ளை, செம்மஞ்சள் நிறங்களில் பெரிய ரோசாப் பூக்கள்.

சுபா : ஆஹா! என்ன வாசனை. இந்த வெள்ளை நிற மல்லிகை.

ரவி : அதோ அந்தக் குளத்திலே சிவப்பு, வெள்ளைத் தாமரை. யோகா : இங்கே பாருங்கள். செவ்வந்தி வகை வகையாய்ப் பூத்திருக்கு.

மீரா : அங்கே பாருங்கள். சிவப்பு, வெள்ளை, செம்மஞ்சள், மஞ்சள் வண்ண வண்ண நிறங்களில் அடுக்கடுக்காய் செவ்வரத்தை.

சாந்தி : ஆமாம் இவை மட்டுமா! பல வண்ண நிறங்களிலே மலர்ந்திருக்கு அந்தூரியம்.

சாந்தி : ஆமாம் இவை மட்டுமா! பல வண்ண நிறங்களிலே மலர்ந்திருக்கு அந்தூரியம்.

ஆசிரியர் : வண்ண வண்ணப் பூக்களிலே இனிப்பான தேனிருக்கு. வண்ணத்துப் பூச்சிகளும் வண்டுகளும் வந்திருந்து வட்டமிட்டுப் பறந்து பறந்து தேனைக் குடித்து மகிழ்வதைப் பாருங்கள்.