1) | 2) | 3) |
4) | 5) | 6) |
7) | 8) | 9) |
1அதிகாலையில் நித்திரை விட்டெழுவோம். காலைக்கடன்களை முடிப்போம். தினமும் சுத்தமான நீரில் குளிப்போம். கடவுளை வணங்குவோம். பாடங்கள் படிப்போம். பாடசாலை செல்வோம். நண்பர்களுடன் அன்பாய்ப் பழகுவோம். பகிர்ந்து உண்போம். ஆசிரியர் சொல் கேட்போம். எப்போதும் உண்மை பேசுவோம். இனிமையாகப் பேசுவோம். நன்றி கூறுவோம். |
|
2மாலையில் ஓடி விளையாடுவோம். முகம் கால் கழுவுவோம். முகம் கால் கழுவுவோம். கடவுளை வணங்குவோம். பாடங்கள் படிப்போம். கதைகள் வாசிப்போம். தினமும் பால் அருந்துவோம். பற்களைச் சுத்தம் செய்வோம். எட்டு மணித்தியாலம் நித்திரை செய்வோம். |
|
3பெரியோரை மதிப்போம். மரியாதை செய்வோம். பெற்றோருக்கு மதிப்பளிப்போம். நண்பருக்கு ஆசி பெறுவோம். விருந்தினரை உபசரிப்போம். வெற்றியடைந்தவருக்கு வாழ்த்துக்கள் கூறுவோம். உயிர்களிடத்தில் அன்பு காட்டுவோம். சூழலைச் சுத்தமாக வைப்போம். கடமை செய்பவருக்குப் பாராட்டுக் கூறுவோம். ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம். |
|
4சத்துணவு உண்போம். பழங்களைக் கழுவி உண்போம். உடை சுத்தம் பேணுவோம். உண்ணுமுன் கைகள் கழுவுவோம். உண்ட பின் பற்களைச் சுத்தம் செய்வோம். ஆடிப் பாடி மகிழ்ந்திடுவோம். |
|