பாடம் 9: நாம் உண்பனவும் குடிப்பனவும்

நாம் தினமும் காலை, மாலை, இரவு ஆகிய மூன்றுவேளை சாப்பிடுகிறோம். மாலையில் சிற்றுண்டி உண்பதும் இன்று வழக்கமாகி விட்டது. எமது உணவின் பெரும்பகுதி தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றது. சிறுபங்கு விலங்குகளில் இருந்து பெறுகிறோம். நீரும் சில உப்புக்களும் சூழலில் இருந்து கிடைக்கின்றது.

நாம் உண்ணும் காய்கறிகள்

இலைவகை: கீரை, வெந்தய இலை, இலைக்கோவா, கோவா, அகத்தியிலை, வல்லாரை, லீக்ஸ்.

காய்கறிகள் உயிர்ச்சத்தும் நார்ப்பொருளும் தருகின்றன. கிழங்குகளில் மாச்சத்தும் உண்டு.

வாழைக்காய்

சுரைக்காய்

பலாக்காய்

கத்தரிக்காய்

வெண்டிக்காய்

ஈரப்பலாக்காய்

பூசனிக்காய்

முருங்கைக்காய்

அவரைக்காய்

பயற்றங்காய்

குடை மிளகாய்

பாகற்காய்

புடலங்காய்

பீன்ஸ் (போஞ்சி)

முருங்கை இலை

கெக்கரிக்காய்

மரவள்ளிக்கிழங்கு

வல்லாரை

உருளைக்கிழங்கு

முள்ளங்கி

அகத்தி இலை

வற்றாளைக்கிழங்கு

பீற்றூட்

பொன்னாங்காணி

கரட்

புரொக்கலி

கோலிஃபிளவர்

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பழங்கள்

அப்பிள்பழம்

அத்திப்பழம்

செறிப்பழம்

பலாப்பழம்

தோடம்பழம்

ஸ்ரோபெரி

அவக்காடோ

கொய்யாப்பழம்

தக்காளிப்பழம்

மாம்பழம்

திராட்சைப்பழம்

பேரீச்சம்பழம்

வத்தகைப்பழம்

மாங்குஸ்தான்

புளுபெறி

நெக்ரறீன்

பப்பாசிப்பழம்

அன்னாசிப்பழம்

பீச்பழம்

மாதுளம்பழம்

இறம்புட்டான்

பிளம்ஸ்

விளாம்பழம்

வாழைப்பழம்

பழங்களில் உயிர்ச்சத்தும் நார்ப்பொருளும் உண்டு. பல பழங்களை மாறிமாறி உண்பது நல்லது.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

தானிய உணவுகள்

குழுக் கைவேலை

மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தும் தானியங்களை ஒரு மட்டையில் ஒட்டி காட்சிக்கு வைக்கவும்.

நெல் கோதுமை சோளம் பார்லி (Barley)
குரக்கன் ஓட்ஸ் (Oats)

தானியத்திலிருந்து செய்யப்படும் உணவுகள்

அப்பம் பிட்டு சோறு கேக் நூடில்ஸ்
Hopper Pittu Rice Cake Noodles
பாஸ்ரா பாண் இடியப்பம் தோசை இட்லி
Pasta Bread String Hopper Dhosa Idly
பூரி ரொட்டி பலகாரங்கள் பாற்புக்கை பாயசம்
Poori Rotti Shorteats Milkrice Paayuasam

தானிய உணவுகள் சக்திதரும் மாச்சத்து உடையன. தவிட்டைத் தீட்டாது உபயோகித்தால் நார்ப்பொருளும் கிடைக்கும்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பருப்பு வகைகள்

குழுக் கைவேலை

மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தும் பருப்பு, அவரை, வித்து வகைகளை மட்டையில் ஒட்டி காட்சிக்கு வைக்கவும்.

மைசூர் பருப்பு துவரம்பருப்பு பயறு
சோயா கடலை பீஸ் (Peas) உழுந்து
கிட்னிபீன்ஸ் (Kidney Bean) கறுப்பு பீன்ஸ் (Black Bean)

பருப்பு வகைகளில் புரதமும் மாச்சத்தும் உண்டு. மாமிச உணவு உண்ணாதவர்கள் பருப்புவகை உணவை அதிகமாக உண்ணல் வேண்டும். வடை, பகோடா, முறுக்கு, கொழுக்கட்டை, மோதகம் முதலிய உழுந்து கடலை, பயறு முதலியன பருப்புக்களால் செய்யப்படும் உணவுகளாகும்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

மாமிச அல்லது மச்ச உணவுகள்

இறைச்சி (Meat)

மீன்(Fish)

நண்டு(Grab)
இறால்(Prawn/ Shrip) கணவாய்(Squid/Cuttlefish) முட்டை(Egg)
கருவாடு(Dryfish) ஈரல்(Liver) சிங்கஇறால்(Lobster)

மாமிச உணவில் புரதங்களும், கொழுப்புகளும் உண்டு. கொழுப்பு நீக்கிச் சமைத்தல் நன்று. முட்டை புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து முதலியன உடையதால் பூரண உணவாகும்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பாலும் பால் தரும் உணவும்

பாலும் ஒரு பூரண உணவாகும். பாலிலிருந்து பெறும் தயிர், மோர், வெண்ணெய், சீஸ், பனீர், புளிக்கழி (Sour Cream) குளிர்கழி(Ice Cream) என்பனவும் விரும்பத்தக்க உணவாகும்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பருகும் பானங்கள்

பானங்களில் தண்ணீரே சிறந்தது. ஒருவர் ஒருநாளில் 8 கிண்ணம் அருந்துதல் வேண்டும்.

பால் தினம் ஒரு அல்லது 2 கிண்ணம் அருந்தலாம். ஏனையவற்றை குறைந்தளவு பருகுதல் நன்று.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

கொழுப்பும் எண்ணெய் வகையும்

வெண்ணெய் மார்ஜரீன் தாவர எண்ணெய்கள்

நாம் ஏனைய உணவுகளோடும் கொழுப்பை உள்ளெடுப்பதால் தனிக் கொழுப்பு வகை உணவு சிறிதளவே தேவையாகும்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

சுவையும் மணமும் தரப்பயன்படும் உணவுகள்

கொத்தமல்லி இலை
Coriander Leaf
கறிவேப்பிலை
Curry Leaf
பார்ஸ்லி இலை
Parsley
மஞ்சள்
(Turmeric)
கறுவா
(Cinnamon)
சாதிக்காய்
(Nutmeg)
இஞ்சி
(Ginger)
உள்ளி
(Garlic)
மிளகு
(Pepper)
கடுகு
(Mustard)
பெருஞ்சீரகம்
(Fennel)
வெந்தயம்
(Fenugreek)
லெமன்
(Lemonn)
வெண்காயம்
Onion
மிளகாய்
Green Chilli
தேசிக்காய்
(Lime)
பழப்புளி
(Turmaric)
கொத்தமல்லி
(Coriander)
கராம்பு
(Clove)
ஏலக்காய்
(Cardamon)
குங்குமப்பூ
(Saffron)
கறிஉப்பு
(Salt)
சீரகம்
(Cumin)
மின்ற் இலை
(Mint)

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

உரையாடிப் பார்ப்போம்

ஏழு மாணவரை பெயர்படி வாசிக்கச் செய்யவும். (உரையாடுபவர்கள் ரவி, சசி, கிரி, ராசி, சாரு, மீனா, ஆசிரியர்)

ரவி : நான் எப்பொழுதும் விரும்பி உண்பது உருளைக் கிழங்கு மட்டுமே.

சசி : எனக்குக் கிழங்கு விருப்பம் இல்லை. கீரை தான் விருப்பம்.

கிரி : நான் விரும்புவது முட்டைதான்.

ராசி : எனக்கு எதுவுமே சாப்பிடப் பிடிக்காது. கேக் தான் விருப்பம்.

சாரு : நான் காய்கறி அதிகம் சாப்பிடுவதில்லை. ஆனால் பால் தினம் குடிப்பேன்.

மீனா : எனக்கும் பால் தான் விருப்பம். ஆனால் பழமும் சாப்பிடுவேன்.

சசி,கிரி : வாழைப் பழத்திலும் பார்க்கச் சுவையானது பப்பாசிப்பழம் தான்.

ரவி : இல்லை இல்லை மாம்பழம் தான் மிகவும் சுவையானது.

மீனா : கொஞ்சம் பொறுங்கள் யாரோ கதைக்கும் சத்தம் கேட்கிறது. பார்ப்போம் எல்லோரும் வாருங்கள்.

சாரு : ஆ......... என்ன ஆச்சரியம் பழங்கள் பேசுகின்றனவே! நீங்களும் வாருங்கள் கேட்போம்.

நான் யார் தெரியுமா? நான் தான் மாம்பழம். நான் மிகவும் இனிமையானவன். சுவைத்துப் பாருங்கள்.
நான் யார் தெரியுமா? நான் தான் அப்பிள். சிறுவர்கள், பெரியோர் யாவருமே விரும்பி உண்பது என்னைத்தான்.
நான் யார் தெரியுமா? நான் தான் வாழைப்பழம். எந்தக் காலத்திலும் நான் மிக மலிவாகக் கிடைப்பேன். யாவருமே என்னைத் தான் விரும்பி உண்பார்கள். இருக்கும் இடம் எல்லாம் இனிய மணம் வீசுவேன். தேனிலும் இனிமையானவன் புரியவில்லையா? நான் தான் பலாப்பழம்.
நான் யார் தெரியுமா? நான் தான் பப்பாசிப்பழம். என்னிடம் விற்றமின் சி “C” அதிகம் உண்டு. என்னைத் தான் எல்லோரும் விரும்பி உண்பார்கள்.
நான் தான் பழக்கலவை. (Fruit Salad)) பல பழங்களைச் சேர்த்து உங்களுக்குத் தேவையான பல சத்துக்களைத் தருவது நான் தான். சாப்பிட்டபின் எல்லோரும் விரும்பி உண்பதும் என்னைத் தானே!

மீனா : போதும் போதும் எல்லோரும் வாருங்கள். எமது ஆசிரியரிடம் கேட்போம்.

ஆசிரியர் : நாம் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். நோய் நொடி இன்றி வாழச் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். எமக்குத் தேவையான உணவுகள் தாவரங்களில் இருந்தும், விலங்குகளில் இருந்தும் கிடைக்கின்றன. தாவரங்களில் இருந்து இலை, பூ, காய், கனி, விதை, கிழங்கு வகைகள், எண்ணெய் முதலியன கிடைக்கின்றன. விலங்குகளில் இருந்து மீன், முட்டை, பால் இறைச்சி, கொழுப்பு முதலியன கிடைக்கின்றன.

பிள்ளைகளே ! உணவுகள் எமது உடலை வளர்க்கின்றது. நோயைத் தடுக்கும். சக்தியைத் தரும். நாம் எப்பொழுதும் சுத்தமான உணவை உண்ண வேண்டும். உணவுப் பண்டங்களை மூடிவைத்தல் நன்று. கைகளைக் கழுவிய பின் உண்ண வேண்டும் உண்ட பின் பற்களைச் சுத்தம் செய்தல் மிக அவசியம்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

சமைத்து உண்ணும் உணவு வகைகள்

மீன் குழம்பு கீரைக் கடையல்
புடலங்காய் வறுவல் சீனிச் சம்பல்
இஞ்சித் துவையல் வெங்காய வதக்கல்
பருப்பு சாம்பார் தக்காளி ரசம்
பாகற்காய் வறுவல் கோழிக் கறி
வெண்டைக்காய்ப் பிரட்டல் எலுமிச்சம்பழ ஊறுகாய்
முட்டைப் பொரியல் ரொட்டி வாட்டல்
அவரைக்காய்க் கூட்டு இறைச்சிக் கறி
தேங்காய்ப் பச்சடி (சம்பல்) கத்தரிக்காய் குழம்பு
பாற் சொதி உருளைக்கிழங்குப் பிரட்டல்

அறு சுவைகள் (அறு=ஆறு)

இனிப்பு (கரும்பு, சீனி) (Sweet) புளிப்பு (லெமன்) (Sour)
உறைப்பு (மிளகாய்) (Pungent) உவர்ப்பு (உப்பு) (Salty)
கசப்பு (பாகற்காய்) (Bitter) துவர்ப்பு (பாக்கு) ((Bitter & Salty)