ஒரு நாள் உணவை உண்ணாமல் உங்களால் இருக்கமுடியும். ஆனால், நான் இல்லாமல் உங்களால் வாழ முடியாது. நான் யாரென்று தெரியவில்லையா? சூடு, குளிர், மழை, வெயில் போன்றவற்றில் இருந்து உங்களின் உடலை பாதுகாப்பது நானே. உங்கள் உடலைச் சுத்தமாக வைத்திருக்கவும் நான்தான் உதவுகின்றேன். அதுமட்டுமா? உங்களை அழகாக வைத்திருப்பதும் நான்தான். கம்பளி, பருத்தி, பட்டு, நைலோன் யாவரும் என் இனத்தவர்களே.
பல வண்ண நிறங்களிலும், பல வண்ண வடிவங்களிலும் நான் உங்களுக்கு உதவி வருகின்றேன்.
பாடசாலை மாணவர்கள், தாதிகள், பொலிஸ் படையினர், காவற்துறையினர் சீருடையாக என்னைப் பயன்படுத்துகின்றனர். என்ன? இன்னமும் உங்களுக்குப் புரியவில்லையா? "நான்தான் நீங்கள் அணிந்திருக்கும் உடை". இப்பொழுது சொல்லுங்கள், நான் உங்களுக்கு மிகவும் முக்கியம் அல்லவா?
பழம் | வலம் | நீலம் | வால் |
பலம் | வளம் | நீளம் | வாள் |
தோல் | புகழ் | வளை | தழை |
தோள் | புகல் | வலை | தலை |
மலை | ஒளி | பலி | வளி |
மழை | ஒலி | பழி | வழி |
மரம் | அரம் | பருப்பு | அரை |
மறம் | அறம் | கறுப்பு | அறை |
கரை | எறும்பு | மனம் | கனம் |
கறை | கரும்பு | மணம் | கணம் |
பேன் | பினை | என் | கனி |
பேண் | பிணை | எண் | கணி |