பாடம் 15: விடுகதைகள்

1. கூவி அழைப்பான் கூடி உண்ணுவான். அவன் யார்?

2. கண்ணீர் விட்டே கடைசிவரை ஒளி தருவான் அவன் யார்?

3. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?

4. உயர எறிந்தால் விழுவான் தரையில், தரையில் எறிந்தால் உயர எழுவான் அவன் யார்?

5. நான்கு கால்கள் உண்டு - ஆனால் நடக்கத் தெரியாது. யார் அது?

6. செம்பு நிறைய சிவப்பு முத்துக்கள் அது என்ன?

7. காதை முறுக்கினால் கத்துவான் அவன் யார்?

8. சிவப்புப் பெட்டியில் மஞ்சள் முத்துக்கள் அது என்ன?

9. கழற்றிய சட்டையை மீண்டும் போட மாட்டான் அவன் யார்?

10.இரண்டு பெண்களுக்கு பன்னிரண்டு பேர் காவல் அது என்ன?


___________________________________________________________________________________________________________________________________________________________________

2. உரத்து வாசிப்போம்.


___________________________________________________________________________________________________________________________________________________________________

புழு எங்கே?............. கண்டுபிடியுங்கள்

கொய்யா மரத்தில் இருந்த அணில் ஒரு பழத்தைத் கடித்து தின்றது. அதன் அருகே புழு ஒன்று இலையைத் தின்று கொண்டிருந்தது.

அணில், புழுவிடம்"நண்பா! வா விளையாடலாம்" என்றது. ஆனால், புழு பேசவில்லை.

இலையைத் தின்று கொண்டே இருந்தது. அப்போது அங்கே தேனீ ஒன்று வந்தது. புழுவைப் பார்த்தது. "இப்படித் தின்றுகொண்டே இருந்தால் பருத்து விடுவாய். உன்னால் அசையக்கூட முடியாது. என்னைப் பார். நான் சிறிதாக இருப்பதால் இலகுவாகப் பறக்க முடிகிறது" என்றது. புழு ஒன்றுமே பேசவில்லை. இலையைத் தின்று கொண்டே இருந்தது

புழுவின் உடல் பருத்தது. நிறம் மாறியது. நாட்கள் சில சென்றன. அணிலும் தேனீயும் புழுவைத் தேடின. ஆனால் புழு இருந்த இடத்தில் ஒரு கூடு இருப்பதைக் கவனித்தன. புழுவிற்கு என்ன நடந்தது என யோசித்தன. அப்போது ~டப்| என்ற சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம்! அதிலிருந்து வண்ணச் சிறகுகளுடன் பூச்சி ஒன்று வெளியே வந்தது. அதன் சிறகுகள் விரிந்தன. பூச்சி வண்ணம் கொண்டு வானில் பறந்தது.

"ஆ................. வண்ணத்துபூச்சி!" என்ன அழகாக வானில் பறக்கிறது!