சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக் கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கொஞ்சும் புறாவே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
தேனே பாலே சாய்ந்தாடு
தீந்தமிழ் முத்தே சாய்ந்தாடு