பாடம் 11 : ஒ ... ஒலியுடன் சொற்களை வாசிப்போம்.

ஒன்று
ஒன்பது
ஒட்டகம்




கொ சொ தொ பொ மெ

கொக்கு
சொண்டு
பொம்மை
மொட்டு
கொடி
தொப்பி
பொட்டு




சொற்பயிற்சி :

குறுகிய, நீண்டு ஒலிக்கும் சொற்கள் வாசிப்போம்.

தடி தாடி கல் கால்
அடி ஆடி கண் காண்
மடு மாடு மின் மீன்
படு பாடு பசி பாசி
சுடு சூடு பணி பாணி
எடு ஏடு அணி ஆணி
வடை வாடை சிலை சீலை
குடை கூடை பனை பானை
கொடி கோடி மலை மாலை
அரை ஆரை படம் பாடம்
குரை கூரை மடம் மாடம்
பணம் பாணம் ஒட்டு ஓட்டு
வனம் வானம் கட்டு காட்டு
கனம் கானம் நடு நாடு




சேர்ந்து பாடுவோம்.

குடை பிடித்துச் செருப்புமிட்டு....

குடை பிடித்துச் செருப்புமிட்டு

புத்தகமுங் கொண்டு

குடுகுடென நடந்து வரும்

குழந்தைகளே கேளீர்


மழைக்காலம் வழி வழுக்கும்

மிகக் கவனம் மக்காள்

வழியருகே வெள்ளமுண்டு

விலகிவர வேண்டும்


வெள்ளத்தில் கல்லெறிந்து

விளையாட வேண்டாம்

வீண்சண்டையால் வழுக்கி

விழுந்தெழும்ப வேண்டாம்


அம்மா சொல் தட்டாமல்

ஆசிரியர்க் கடங்கி

ஆசையுடன் பள்ளியிலே

படித்துவர வேண்டும்