பாடம் 16: திருவள்ளுவர்

நாம் தமிழர். எமது தாய் மொழி தமிழ். தமிழ் மொழி மிகவும் இனிமையானது. எமது தாய்மொழி பல ஆயிரம் வருடங்கள் பழைமையானது. இத்தகைய சிறப்பு மிக்க எமது தமிழ் மொழியிலே பல சிறந்த நூல்கள் உள்ளன. அவற்றுள் தெய்வநூல், பொய்யாமொழி, முப்பால் எனப் போற்றிக்கூறப்படும் திருக்குறளும் ஒன்றாகும்.

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருவள்ளுவர் தமிழ் நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் எனக் கூறப்படுகின்றது. அவருக்குத் தெய்வப் புலவர், பொய்யா மொழிப் புலவர், பெருநாவலர் என வேறு பெயர்களும் உள்ளன.

திருக்குறளில் நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறட்பாக்கள் உண்டு. ஒவ்வொரு குறளும் இரண்டு வரிகளைக் கொண்டவை. அவை அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருட்களைப் பற்றி உயர்ந்த கருத்துக்களைக் கூறுகின்றன.

திருக்குறளின் பெருமையை அறிந்த பிறமொழி அறிஞர்கள் திருக்குறளைத் தமது மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர். போப்பையர் (சுநஎ. பு.ரு. Pழிந) எனும் அறிஞர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

திருக்குறள் "உலகப் பொதுமறை" "தமிழ் மறை" " பொய்யா மொழி" எனவும் போற்றப்படுகிறது. திருக்குறளை நாமும் கற்று அதன்வழி நடப்போம். திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிறித்துவுக்கு முன் 31ம் ஆண்டாகும். இந்த ஆண்டிலிருந்தே தமிழ் ஆண்டு கணக்கிடப்படும். எனவே 2020ம் ஆங்கில ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு 2051 எனப்படுகின்றது.

திருக்குறள்

கடவுள் வாழ்த்து

சொற்களை உரத்து வாசிப்போம்.

திருக்குறள் வணக்கம் காலைக்கடன்
அச்சு இயந்திரம் நிகழ்ச்சி காய்ச்சல்
நாட்டுப்பற்று பாராட்டு கட்டம்
மருத்துவம் வாழ்த்து முத்துமாலை
விழிப்பு செழிப்பு களைப்பு
சிற்றாறு பெற்றோர் ஆற்றுநீர்

__________________________________________________________________________________________________________________________________________________________________________________


வாசியுங்கள்