பாடம் 19: புத்தாண்டே வருக!

புத்தாண்டே வருக!

புத்தாண்டே வருக!

வருக வருக புத்தாண்டே,

வருக வருகவே!


காலையில் எழுந்திடுவோம்.

மருத்து நீராடிடுவோம்.

வண்ண வண்ணப் புத்தாடை அணிந்து நாம் மகிழ்ந்திடுவோம்.

கோயில் சென்று வழிபடுவோம்.

பெற்றோரை வணங்கிடுவோம்.

உறவினரை வரவேற்போம்.

விருந்துண்டு மகிழ்ந்திடுவோம். நாங்கள் மூன்று வருடப்பிறப்பைக் கொண்டாடுகிறோம். ஜனவரி 1ம் நாள் கிறித்தவ வருடப்பிறப்பு. ஜனவரி 14ம் நாள் (தை முதலாம் நாள்) தமிழ் வருடப்பிறப்பு. ஏப்ரல் 14ம் நாள் சித்திரை வருடப் பிறப்பு.



வருடப் பிறப்புக் கொண்டாட்டம்

உலகம் எங்கும் தை மாதம் முதலாம் திகதியை புதுவருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். சித்திரை மாதம் முதலாம் நாள் தமிழ்ப் புதுவருடம் பிறக்கும். வருடப் பிறப்பிற்கு முதல் நாளில் வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்வோம். சாம்பிராணி தூபம் போடுவோம். வீட்டை அலங்கரிப்போம். வீட்டு வாயிலில் கோலம் இடுவோம். பலகாரம் சுடுவோம்.

வருடப்பிறப்பு அன்று அதிகாலையில் நித்திரை விட்டு எழுவோம். மருத்துநீர் வைத்து நீராடுவோம். புதிய ஆடைகள் அணிவோம். குத்து விளக்கு ஏற்றுவோம். கடவுளை வணங்குவோம். கோயிலுக்குச் செல்வோம். பெற்றோரை வணங்குவோம். ஆசி பெறுவோம். நல்ல நேரத்தில் கைவிசேடம் வாங்குவோம். விருந்தினரை உபசரிப்போம். வாழ்த்துக்கள் கூறுவோம். விருந்து உண்போம். தானதருமம் செய்வோம். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வோம்.

புத்தாண்டுப் பலகாரங்கள்