தைப்பொங்கல் தமிழரின் புத்தாண்டுத் திருநாள்.
தைப்பொங்கல் தை மாதம் முதலாம் திகதி வரும்.
தைப்பொங்கல் அன்று சூரியனுக்குப் பொங்கல் பொங்குவோம்.
அம்மா வீட்டு முற்றத்தில் கோலம் இடுவார்.
அப்பா நிறைகுடம் வைப்பார்.
அம்மா குத்துவிளக்கு ஏற்றுவார்.
அப்பா அடுப்பில் பானையை வைப்பார்.
அம்மா பொங்கல் பொங்குவார்.
சிறுவர்களாகிய நாம் வெடிகள் சுட்டு மகிழ்வோம்.
பொங்கலுடன் பழங்கள், கரும்பு, இளநீர், வெற்றிலை, பாக்கு என்பனவற்றைப் படைப்போம்.
தேவாரம் அல்லது பொங்கற் பாடல்கள் பாடுவோம்.
சூரியனுக்கு நன்றி கூறிப் படையல் வைப்போம்.
யாவரும் பொங்கல் உண்டு மகிழ்வோம்.
சுற்றத்தினருடனும் நண்பர்களுடனும் பொங்கல் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வோம்.
____________________________________________________________________________________________________________________________________________________________________________