(இடம் : மிருகக் காட்சிச்சாலை)
(பாத்திரங்கள் : மாமா, சுதா, வினுஜா, நரேன், விநோத்)
நரேன் : அதோ பாருங்கள். ஆ....! எத்தனை மிருகங்கள்! எத்தனை விதம் விதமான பறவைகள்!
சுதா : இதற்கு முன் நீ மிருகக் காட்சிச்சாலைக்கு வந்திருக்கிறாயா?
நரேன் : இல்லை சுதா.
விநோத் : நானும் வந்ததில்லை. சுதா! நீ வந்திருக்கிறாயா?
சுதா : ஆமாம். ஒரு முறை எனது அப்பாவூடன் வந்தேன்.
மாமா : எல்லோரும் வாருங்கள். நாம் ஒவ்வோர் இடமாகப் போய்ப் பார்க்கலாம்.
சுதா : வாருங்கள் வினுஜா. மாமாவூடன் நாம் எல்லோரும் போகலாம்.
மாமா : அதோ பாருங்கள், நாம் போகவேண்டிய வழித்தடம் அம்புக் குறியால் காட்டப்பட்டிருக்கின்றது. அதன் வழி போனால் சுலபம். சுதா! வினுஜா உனது சிநேகிதியா?
சுதா : ஆமாம் மாமா, இவள் எங்கள் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிப்பவள். அவள் எனது நண்பி.
நரேன் : ஆமாம். ஆமாம்.
விநோத் : எங்களுக்கும் தான் அவள் நண்பி.
வினுஜா : அதோ அந்தக் கூட்டில் இருப்பதுதான் கங்காரு. பெயர்ப்பலகையில் அப்படித்தான் எழுதப் பட்டிருக்கிறது.
விநோத் : அதன் வயிற்றுப் பகுதியில் ஒரு பை இருக்கிறது அதோ! அதன் குட்டி அதற்குள்தான் இருக்கிறது.
மாமா : ஆமாம், எந்நேரமும் அதற்குள்தான் வைத்திருக்கும். அங்கே பாருங்கள் குட்டியை வைத்துக் கொண்டே அது தாவித்தாவி ஓடுகிறது.
சுதா : குட்டி வளர்ந்ததும் வெளியே விட்டுவிடுமாம். அதற்குப் பிறகு வைத்துக் கொள்ளாதாம் என்று அப்பா சொன்னார்.
நரேன் : அங்கே பாருங்கள் யானையை. ஐயோ.... ஒரு காலைச் சங்கிலியால் கட்டியிருக்கிறார்கள்.
விநோத் : ஏன் மாமா எல்லாப் பிராணிகளையூம் கூடுகளில் அடைத்துஇ அல்லது வேலிகள் அமைத்துஇ அல்லது கட்டி வைக்கின்றனா;?
மாமா : நல்ல கேள்வி. விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் வசிக்கும். சில விலங்குகள் காட்டில்தான் வசிக்கும். சில விலங்குகளை வீட்டிலும் வளர்க்கலாம். சிலவற்றைப் பண்ணைகளில் வளர்க்கலாம். சில உயிரினங்கள் ஆறுஇ குளம்இ கடல் போன்ற நீர் நிலைகளில் வசிப்பவை. சில விலங்குகள் இந்த நாட்டில் இல்லாதவை. வெளிநாடுகளில் வசிப்பவை. இவற்றை எல்லாம் மனிதர் கொண்டு வந்து செயற்கையான வசதிகளைச் செய்து அவைகளை அடைத்துவைத்திருக்கிறார்கள். அவை ஓடி விடாமல் இருப்பதற்குத்தான் கூடுகளும் வேலிகளும்.
வினுஜா : அப்படிச் செய்யாவிட்டால் சில விலங்குகள் நம்மைக் தாக்கும் அல்லவா?
மாமா : நீ சொல்வதிலும் உண்மை இருக்கிறது.
சுதா : சுதந்திரமாக உலவூம் பிராணிகளைக் கூண்டில் அடைத்து அல்லது கட்டி வைப்பது பாவம் அல்லவா?
விநோத் : சுதா சொல்வது சாpதான். எல்லாம் பாவம் மாமா.
மாமா : விலங்குகளின் சரண் ஆலயங்கள் சில இருக்கின்றன. அங்கே விலங்குகள் சுதந்திரமாகத் திரியூம். நாமும் போய்ப் பார்க்கலாம்.
சுதா : தாகமாக இருக்கிறது மாமா.
வினுஜா : அதோ சிற்றுண்டிச் சாலை இருக்கிறது. எமது தாகம் தீர ஏதாவது அருந்துவோமா?
மாமா : அது நல்ல யோசனை. ஆனால், குடித்துவிட்டு உடனே திரும்ப வேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் யானைகளின் சாகச விளையாட்டுத் தொடங்கிவிடும்.
எல்லோரும்: ஆமாம். ஆமாம். நாம் ஆவலோடு எதிபாக்கும் யானைகளின் சாகசங்களைப் பாக்கத் தவற மாட்டோம்.
வினுஜா : வாருங்கள், விரைந்து திரும்புவோம்.