பத்திரிகைகளில் வரும் செய்திகள் நிருபர்களால் பல வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன. தலத்தில் நேரடியாகவும், பேட்டிகள் மூலமும் சேகரிக்கப்பட்ட செய்திகளை எழுதுவதில் தயக்கம் இருக்காது. ஆனால் அவற ;றில் உண்மையான செய்தி எது, தவறான செய்தி எது, என்ற வேறுபாட்டை நன்கு தெரிந்தபின்னரே செய்தி அறிக்கை தயாரிக்கப்படல் வேண்டும். என்ன, எப்போது, எங்கே, எவர், ஏன், எப்படி, என்ற ஆறு வினாக்கட்கு ஏற்ற விடைகளைக் கொண்டு இருத்தல் செய்தியின் இலக்கணம்என்று கூறலாம்.
செய்தி எழுதும்போது நாம் ஒருதலைப் பட்சமான கருத்துக் கொள்ளாமல், பல அம்சங ;களைக் கருத்தில் கொண்டு நடு நிலையில் இருந்து எழுதுதல் அவசியம். செய்தியின் தரம், தேவை, முக்கியத்துவம், நம்பகத் தன்மை, மூல ஆதாரம் போன்ற அம்சங்கள் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும். செய்தி அறிக்கை எழுதும் ஊடகப் பணியில் பயிற்சி பெற விரும்புவோர், செய்தி எழுதுவதன் முன்னர் நல் நோக்கங்களைப் புரிந்துகொண்டு செயலாற்றுதல் அவசியம். செய்தி அறிக்கை எழுதும் போது ஊடகப் பணியில் ஈடுபடுவோர் குறிப்பாக விளக்கம், பொருட்செறிவு, தவறின்மை ஆகிய நான்கு முக்கிய அம்சங்களைத் தமது கருத்தினில் கொண்டு செயற்படவேண்டும்.
நோக்கம் குறிப்பாக மக்களின் பொழுது போக்குக்காகவும், சமுதாய நலனுக்ககவும், மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்காகவும் சமூக ஒற்றுமைக்காகவும் நற்செயல்களை ஊக்குவிக்கவும் செய்திகள், கட்டுரைகள் எழுதப ;படல் நன்று. ஊடகங்களில் உணர ;சிகளைத் தூண்டி சமூகத ;திற்கு குந்தகம் விளைவிக்கும் செய்தி அறிக்கைகளைப் பிரசுரிக்க முன்னர் அவை ஏற்படுத்தக்கூடிய சாதக பாதகமான விளைவுகள் பரிசீலிக்கப்படல் வேண்டும். சமுதாயத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தத் தூண்டும் விடயங்களைத் தவிர்க ;கக் கூடிய முறையில் எழுதுதல் பத்திரிக்கையாளர் பேணவேண்டிய தருமமாகும்.
விளக்கம் (clear): வாசிப்பவர்கட்கு எளிதில் புரியும ;படியாக பொதுமக்களின் பாவனையில் உள்ள சொற்களைப் பிரயோகித்தல் வேண்டும். நடைமுறையில் உள்ள சொற்பதங்களினைக் கொண்ட செய்திகளை வாசிக்கும் போது வாசிப ;போர் மத்தியில் உள்ளங்களில் தெளிவான உணர்வு தோன்றுதல் வேண்டும். கடும் பதங்களையும் வழக்கிழந்த சொற ;களையும் தவிர்ப்பது நன்று.
பொருட் செறிவு (concise): செய்தி எப்போதும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை கொண்டதாக எழுதப்படல் வேண்டும். வாசிக்கும்போது வாசகர்களின் மனதில் வேறு வினா அல்லது குறை எழாதவாறு செய்தி கூடியளவில் பூரணமாக இருத்தல் யாவருக்கும் திருப்தி அளிக்கும். வாசகர்கள் அறிக்கைகள் வாசிப்பதில் அதிக நேரத்தினை செலவிட விரும்பமாட்டார்கள். எனவே பொருட் செறிவு கொண்ட, குறைந்தளவு சொற்களைக் கொண்டு கூடிய விபரங்களை விளக்குதல் வேண்டும்.
நம்பகத்தன்மை (correctness): வெளியிடும் செய்தி சாரம் பிழை இன்றிச் சரியானதாக இருப்பது முக்கியமானதாகும். சட்ட ரீதியான தகுந்த ஆதாரம் இன்றிச் செய்தி தயாரித்து வெளியிடுதல் தவறானதாகக் கருதப்படும். தவறான செய்திப் பிரசுரத்தின் மூலம் யாருக்காவது ஏதாவது ஊறு ஏற்படின் ஊடகவியலாளர் நீதிமன்றத்தினால் தண்டனைக்கு ஆளாகவும் நேரிடலாம். எனவே செய்தி எழுதுபவர்கள் முறையாகச் சிந்தித்து, சரியான ஆதாரம் கிடைத்த பின்னரே தமது அறிக்கையை வெளியிடல் முக்கியமானதாகும்.
உள்ளுர் செய்திகள், வெளியூர் செய்திகள், அரசியல் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், காலநிலைச் செய்திகள் எனப் பல வகையான துறைகளில் செய்திகளை ஊடகங்கள் பிரசுரிக்கின்றன. செய்தி எழுதுவோர் அந்த அந்தத் துறைகளில் தகுந்த தேர்ச்சி பெற்று இருப்பது சிறப்பானது. செய்தி சேகரிக்கும் போது அவற்றின் நம்பகத் தன்மையைச் சீர்தூக்கிப் பார்த்த பின்பு, ஊடக தர்மத்திற்கு ஏற்ப செய்திகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அறிக்கையை எழுதலாம்.
நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் விளம்பரங்கள், வணிகச் செய்திகள், அரசியற் செய்திகள், செலாவணிச் செய்திகள் போன்றவற்றுக்குக் காட்டும் அக்கறையை, புலன்களை ஈர்க்கும் செய்திகளுக்குக் காட்டமாட்டார்கள். ஆனால், நாட்டுப்புறங்களில், உள்ளுர்களில் வாழும் மக்கள் நகர்ப்புறத்தார் போலன்றி, புலன்களைக் கவரும் செய்திகளில் அக்கறை காட்டுவர். புலன்களைக் கவரும் செய்திகள் திடுநேர்கை, காதல், காவலர் நடவடிக்கை, அவலச் செய்திகள் போன்றவற்றிற்கு முதன்மை அளிப்பர்.
வாசகர்களின் தரம் பல தரப் பட்டதாக இருப்பதனால் யாவருக்கும் பொதுவான முறையில் செய்தியறிக்கை எழுதப்படுவது வழக்கம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது செய்திகள் ஒரு சமநிலையைப் பேணும் விதத்தில் பிரசுரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். பிரசுரங்களின் தரத்தினை வாசகர்கள் குறைத்து எடை போடும் விதத்தில் மொழித் தவறுகளுடன் பிரசுரங்கள் இருத்தல் ஆகாது.
(கற்பனை செய்து எழுதப்பட்ட மாதிரிச் செய்திகளைக் கீழே காணலாம்.) தமிழ் முரசு - லிவர்பூல். மக்களை அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல் - தடுப்பூசி போட வேண்டுகோள்.
இம்முறை வின்ரர் போதியளவு பூம்பனி பொழியாமை காரணமாகப் புதிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக நலவாழ்வுத் துறையினர் அஞ்சுகின்றனர். இக்காய்ச்சல் இதுவரை யாரையும் பலிகொள்ளவில்லை. எனினும், பாரிய நலக்குறைவை ஏற்படுத்தி உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதற்கான தடுப்பூசி நடுவங்கள் மாநகர மருத்துவ மனைகள்தோறும் திறக்கப்பட்டுள்ளன. அனைவரும் காலம் தாழ்த்தாமல் முன்னேற்பாடாகத் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது நல்லது என்று நலவாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
கொண்டாட்டம் திண்டாட்டமாய் முடிந்தது நேற்றிரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் லிவர்பூல் மூழ்கியிருந்தபோது ஊரெங்கும் நிகழ்ந்த வானவேடிக்கைகள் கண்ணையும் கவர்ந்து, விண்ணையும் கலக்கின. ஏற்கனவே, ஆர்வ மிகுதியில் இருந்த இளைஞர் சிலர் மதுபானங்களை அருந்தி மகிழ்வோடு ஆரவாரமாகத் தெருக்களில் நடனமாடினர். புத்தாண்டு பிறந்து, வாண வேடிக்கைகள் ஊரெங்கும் மின்ன, அவர்கள் களிப்பில் தெருவில் வருவோர் போவோரைக் கட்டியணைத்து முத்தமளித்தனர். அவர்களில் ஒருவன் இந்த ஆரவாரக் கொண்டாட்டத்தில் அடையாளம் தெரியாமல் இரு கன்னிப் பெண்களை அணைத்து முத்தமளித்துவிட்டான். அப்பாடா! விழுந்ததே அடி கன்னம் புளிக்க அவன் தான் தவறாகச் செய்யவில்லை என்று எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான். அப்பெண்கள் விடுவதாய் இல்லை. பின்னர் தெருவால் சென்ற முதியோர் சிலர் தலையிட்டு விடுவித்தனர். போதுமடா போதும் என்று போனான் அந்த இளைஞன். (உள்ளுர்ச் செய்திகள் - செய்தியாளர் தமிழ்வாணி)