VI) நான்மணிக்கடிகை
மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்
தனக்கு தகைசால் புதல்வர் மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு
அருஞ்சொல் விளக்கம்
நான்கு + மணி + கடிகை = நான்கு மணிகளைக் கொண்ட அணிகலன்
விளக்கம்= ஒளி : மடவாள்= பெண் : தகைசால்= திறமையுள்ள
காதல் புதல்வர்= அன்புள்ள பிள்ளைகள் ; ஓதின்= கூறின்
உணர்வு= நற்பண்புகள்
ஒவ்வொரு பாட்டும் நான்கு அறிவுரைகளைக் கொண்டதால் நான்மணிக்கடிகை காரணப் பெயராக நூலுக்குக் கொடுக்கப்பட்டது.
இப் பாட்டில் வரும் நான்கு அறிவுரைகள்
1) வீட்டுக்கு ஒளி தருபவள் பெண்
2) தாய்க்கு பெருமை தகைசால் பிள்ளைகள்
3) மனதுக்கு இனிய அன்புள்ள பிள்ளைகளுக்கு கல்வியே பெருமை
4) படித்த பிள்ளைகளுக்கு பெருமை தருவது நற்பண்புகள்
...................................................................................................................................................................................................................