பாடம் 2 : பயிற்சி 8

VIII. வேற்றுமை

ஒரு பெயரின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும். பொருளை வேறுபடுத்திக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் எழுத்துக்கள் வேற்றுமை உருபுகள் என்று கூறப்படும்.

இவ்வாறு பெயர்ச்சொற்கள், இடைச்சொல் உறுப்புகளைப் (Case markers) பெற்று எழுவாயின் செயலைக் காட்டும். வேற்றுமை உருபுகள் இடைச்சொல்லின் ஒரு வகை ஆகும். தமிழில் எட்டு வேற்றுமைகள் உள்ளன. அவற்றில் முதலாவது வேற்றுமைக்கும் எட்டாவது வேற்றுமைக்கும் உருபுகள் கிடையாது.

முதலாம் வேற்றுமை : (எழுவாய் வேற்றுமை)| உருபு இல்லை.

இரண்டாம் வேற்றுமை : (செயப்படு பொருள் வேற்றுமை).உருபு- ஐ (எ+கா: தம்பியை, படத்தை)

மூன்றாம் வேற்றுமை : ( கருவி, கருத்தா வேற்றுமை) உருபுகள். ஆல். ஒடு, ஓடு, உடன் (எ+கா : மகளால்| அவனோடு : தம்பியோடு : அவனுடன் )

நாலாம் வேற்றுமை : (கொடை வேற்றுமை) உருபுகள் - கு. ஆக (எ+கா : கடைக்கு, தமிழனாக)

ஐந்தாம் வேற்றுமை : (நீக்கல், எல்லை வேற்றுமை) உருபுகள் - இல், இன், இருந்து, நின்று. ( எ+கா : கல்வியில்| படத்தின்| வீட்டிலிருந்து| வீட்டினின்று)

ஆறாம் வேற்றுமை: (கிழமை வேற்றுமை) உருபு- அது, உடைய (எ+கா : எனது| என்னுடைய)

ஏழாம் வேற்றுமை: (இட வேற்றுமை) உருபு - இல், கண், இடம் (எ+கா : மரத்தில், ஊரின்கண், அப்பாவிடம் )

எட்டாம் வேற்றுமை: (விளி வேற்றுமை) உருபு இல்லை. அவை அழைக்கும் சொற்கள்| நெடில் அசை ஈற்றில் வரும்| (எ+கா : தாயே!, அண்ணா!, பாட்டீ!)

IX திருக்குறளுக்குத் தரப்பட்ட பொருளில் பயன்படுத்திய வேற்றுமை பெற்றுவரும் ஐந்து சொற்களைத் தெரிந்து எழுதுக.

1. .........................................................................................................................................................

2. .........................................................................................................................................................

3. .........................................................................................................................................................

4. .........................................................................................................................................................

5. .........................................................................................................................................................