காட்டில் ஓர் ஆமையும் ஒரு முயலும் ஓட்டப் பந்தயத்திற்கு தயார் ஆகின . ஓட்டம் ஆரம்பமானதும் முயல் மிகவும் வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தது. ஆமையைக் காணவேயில்லை. ஆமை மெதுவாகத்தானே வரும். அதுவரை நான் இங்கே படுத்துச் சிறிது ஓய்வு எடுப்போம் என்று நினைத்தது. உடனே அருகே இருந்த பற்றைக்குள் படுத்து உறங்கிவிட்டது. ஆனால் ஆமை எங்கும் நிற்காமல் சென்றுகொண்டே இருந்தது.
ஆமை ஓட்டம் முடிவடையும் இடத்திற்குக் கிட்டச் சென்றபோதுதான் முயல் நித்திரையை விட்டு எழுந்தது. முயல் மிகவும் வேகமாக ஓடியது. ஆனால் அதற்கு முன் ஆமை வெற்றி எல்லைக் கோட்டைக் கடந்து வெற்றி பெற்றது. முயல் தோற்றுப் போய்விட்டது. நாங்கள் ஒரு காரியத்தை ஒழுங்காக விடா முயற்சியுடன் செய்தால் நிச்சயம் வெற்றி அடையலாம்.
__________________________________________________________________________________________________________________________________________________________