கிளி ஒரு பறவை. கிளி மிகவும் அழகான பறவை. அது கீச்…கீச் என்ற சத்தமிடும். அது பச்சை நிறம் உடையது. கிளியின் சொண்டுகள் சிவப்பாக இருக்கும். கிளி மரத்தில் இருக்கும் பொந்துகளில் வாழும். கிளி பழங்களை விரும்பி உண்ணும்.
கிளிகளில் பல இனங்கள் உண்டு. கிளிகள் மனிதர் பேசுவதைக் கேட்டுத் திருப்பிப் பேசும் திறமை உடையன. இதனால் “கிளிகள் பேசும்” என்று கூறுவார்கள். பல நிறங்கள் கொண்ட கிளியைப் பஞ்சவர்ணக் கிளி என்பார்கள்.
___________________________________________________________________________________________________________________________________________________________________
பச்சைக் கிளியே வா வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
பையப் பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்திருக்க வா
கனியருந்த ஓடி வா
வட்டமாய் உன் கழுத்திலே
வான வில்லை ஆரமாய்
இட்ட மன்னன் யாரம்மா
யாம் அறியக் கூறம்மா