பாடம் 16: எங்கள் வீடு.

  1. இது எங்கள் வீடு.
  2. அது ஒரு மாடி வீடு.
  3. எங்கள் வீட்டில் மூன்று படுக்கை அறைகள் இருக்கின்றன.
  4. ஒரு சமையல் அறை இருக்கிறது.
  5. இரண்டு வரவேற்பு அறைகள் இருக்கின்றன.
  6. குளியல் அறை ஒன்றும், கழிப்பறை எனப்படும் மலசலகூடம் ஒன்றும் இருக்கிறது.
  7. எமது வீட்டிற்கு முன்னால் பூ மரங்கள் நிற்கின்றன.
  8. வீட்டிற்குப் பின்னால் பெரிய தோட்டம் இருக்கிறது.
  9. அங்கே பல வகையான செடிகளைக் காணலாம்.
  10. எமது தோட்ட்தில் அழகான கொடிகளும் வளர்ந்து இருக்கின்றன.
  11. ரோஜா, செவ்வந்தி, சூரியகாந்தி போன்ற பூமரங்களும் உண்டு.
  12. நான் கோடை காலத்தில் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவேன்.
  13. எமது தோட்டம் பூத்திருக்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.
  14. நானும் தங்கையும் நண்பர்களுடன் சேர்ந்து எமது வீட்டுத்தோட்டத்தில் பூக்கள் பறித்து மாலைகள் கட்டி விளையாடுவோம்.

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________


பூக்களின் பெயர்கள்: