வட்டமான லட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு.
பாதி விட்டு
எடுத்தான் மீதம் கிட்டு.
உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.
கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்த தெட்டு
மீதம் காலித் தட்டு.
______________________________________________________________________________________________________________________________________________________________
பிள்ளைகளே! நாம் எப்போதும் உண்மை பேசவேண்டும்.