பாடம் 20: புறாக்களும் வேடனும்.

முன்னொரு ஒரு நாள் ஒரு காட்டிலே சில புறாக்கள் உணவு தேடி அங்கும் இங்கும் பறந்து திரிந்தன. வெகு நேரம் தேடியும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஓரிடத்தில் சில தானியங்கள் பரவி இருப்பதைக் கண்டன. உடனே கீழே பறந்து சென்று தானியங்களின் அருகே இருந்தன. அப்போது அங்கு வேடன் ஒருவன் விரித்திருந்த வலையில் சிக்கிக் கொண்டன. இதனைக் கண்ட வேடன் புறாக்களைப் பிடிப்பதற்காக ஓடி வந்தான். புறாக்கள் இதனைக் கண்டன. வேடனிடமிருந்து தப்ப எண்ணின. புறாக்கள் எல்லாமாகச் சேர்ந்து அந்த வலையைத் தூக்கிக்கொண்டு பறந்து சென்றன. எல்லாப் புறாக்களும் ஒற்றுமையாக வலையைத் தூக்கிக்கொண்டு பறந்து சென்றதனால் அவை உயிர் தப்பின.

“ஒற்றுமையே பலம்”

_________________________________________________________________________________________________________________________________________________________


சேர்ந்து பாடுவோம்:

சின்னச் சின்னப் பொம்மை

சிங்காரப் பொம்மை

என்ன வேண்டும் சொல்லேன்?

ஏனோ பேசவில்லை?


பாட ஆட மாட்டாய்

பரம சாதுப் பொம்மை

தேட வைத்து விட்டே

தெருவில் ஓட மாட்டாய்


வளரவில்லை உந்தன்

வயதும் தெரியவில்லை

அழவே மாட்டாய் நல்ல

அழகுப் பொம்மை நீதான்


கொஞ்சமேனும் உண்பாய்

கோபம் வேண்டாம் கண்ணே!

பஞ்சு மெத்தை தருவேன்

படுத்துக் கொள்வாய் கண்ணே!