பாடம் 3 : மலர்கள்

உரையாடலை வாசிப்போம்

ஆள் - 1 : மாலை வேளையில் மலர்கள் மணம் வீசும் பூங்காவில் நடந்தேன். பூக்கள் பேசிக் கொள்ளுவது என் காதுகளில் கேட்கிறது. மலர்கள் உரையாடிக் கொள்ளுமா? ஆம், அதோ அவதானித்துக் கேளுங்கள்.

ரோஜா : மல்லி நண்பரே! இப்போதுதான் வந்தீர்களா?

மல்லிகை : ஆம். நாங்கள் மாலையில் மலர்வதுதானே வழக்கம்.

ரோஜா : அப்படியா? நாங்கள் நாளெல்லாம் அழகாக மலர்ந்து இருப்போம்.

மல்லிகை : இறைவனை மாலையில் வணங்குவதற்காகவே நாங்கள் மாலையில் மலர்ந்திருப்போம்.

ரோஜா : நீங்கள் வெள்ளைநிறம். ஆனால் நாங்கள் பல நிறமுடையப் பூக்களாகக் காட்சி தருகிறோம். .

செவ்வந்தி : ரோஜா நண்பரே! நாங்களும் பல நிறங்களில் மலர்ந்திருப்பதை நீங்கள் காணவில்லையா?

ரோஜா : பெண்கள் எங்களைத் தானே அதிகம் விரும்புகின்றனர்.

மல்லிகை : தமிழ் பெண்கள் எங்களைத் தான் தினம் கொண்டையில் அணிவா. நீங்கள் கண்டதில்லையா?

செவ்வந்தி : அதிக மணம் வீசுபவர்கள் நாங்கள் தானே!

அந்தூரியம் : நண்பர்களே! ஆபத்து வருவதை அறியாமல் உரையாடுகின்றீர்கள். நான் உயரமாக இருப்பதால் எனக்குத் தெரிகிறது. அதோ பாருங்கள்.

ஆள் - 2 : (வேலையாள் கத்தியூடன்) இந்த மலர்கள் அழகாக இருக்கின்றன.

(வேலையாள் எல்லா வகையான மலாகளிலும் ஒவ்வொன்றை வெட்டி எடுத்து ஒரு பூச்சாடியில் வைக்கின்றார்.)

ஆள் - 1 : எல்லாப் பூக்களும் கலந்திருப்பது கவர்ச்சியாக உள்ளதே!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பூமகளின் புன்னகை போல்

பூத்திடு வோமே - கம்பன்

பாமணக்கும் தமிழினைப் போல்

பரிமளிப்போமே!

வண்ண வண்ணச் சேலை கட்டி

மகிழ்ந்திருப்போமே - இந்த

மண்ணகமும் விண்ண கமாய்

மாறச் செய்வோமே !