பாடம் 3 : பயிற்சி 7

7. மரம்

இது ஒரு மரம். மரம் உயர்ந்து வளரும். மரம் நீண்ட காலம் வாழும். மரத்தின் வேர் நிலத்தில் ஊன்றிப் படரும். நிலத்தில் உள்ள நீர்ச்சத்து வேர் வழியாக மரத்தில் சேரும். பெரிய மரங்கள் பல கிளைகளை உடையன. வேம்பு, பலா, மா, புளி போன்ற மரங்களை வீட்டுத் தோட்டங்களில் காணலாம். தேக்கு, வாகை, வேங்கை போன்ற மரங்கள் காட்டில் வளரும். காட்டு மரங்கள் பலம் வாய்ந்தவை. மரம் நிழல் தரும். மரம் பலகை செய்ய உதவும். பலகையினால் சன்னல், கதவு, ஏணி, மேசை, நாற்காலி செய்யலாம்.

பயிற்சி

வெப்ப்ப பிரதேச மரங்க்கள்

மா வேம்பு வாகை

பலா இலுப்பை வேங்கை

வாழை முதிரை நெல்லி

தோடை தேக்கு நாவல்

எலுமிச்சை பாலை விளாத்தி

பனை புளி கமுகு

தென்னை கொய்யா

குளிர் பிரதேச மரங்க்கள்

மேப்பிள் (Maple)) ஓக் (Oak)) பைன் (PIne)

சீடர் (Cedar) அஷ் (Ash)) செறி (Cherry)