___________________________________________________________________________________________________________________________________________________________________________
ஒரு நாள் காட்டிலே ஒரு நரி பசியால் வருந்தியது. உணவு தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. பல இடங்களுக்கு நடந்து மிகவும் களைத்துவிட்டது. கடைசியில் ஒரு தோட்டத்திலே திராட்சைப் பழங்கள் பழுத்து இருப்பதைக் கண்டது. உடனே அங்கே ஓடிச் சென்றது. திராட்சைப் பழங்கள் மிகவும் உயரத்தில் இருந்தன. நரியால் அவற்றை இலகுவாக எட்டிக் கடிக்க முடியவில்லை. பல தடவைகள் தாவித் தாவிப் பார்த்தது. எப்படி முயன்றும் நரியால் திராட்சைப் பழங்களைத் தொடவே முடியவில்லை. மிகவும் ஏமாற்றம் அடைந்த நரி அந்தப் பழங்களைப் பார்த்து “சீ! இந்தப் பழங்கள் புளிக்கும்” என்று கூறிவிட்டுச் சென்றது.
___________________________________________________________________________________________________________________________________________________________________________