எனது பெயர் நரேன்.
எனது காலைப் பொழுதுகள் சுறுசுறுப்பானவை.
எனது மாலை நேரங்கள் மகிழ்ச்சியானவை.
நான் அதிகாலையில் நித்திரை விட்டு எழுவேன்.
காலைக் கடன்கள் யாவூம் முடிப்பேன்.
சிறிது நேரம் அமைதியாகத் தியானம் (Meditation) செய்வேன்.
அதன் பின்னர் சொற்ப நேரம் வாசிப்பேன்.
அம்மா காலை உணவூ தருவார். அதை உண்ட பின்னர் பாடசாலைக்குச் செல்வேன்.
மாலை நேரத்தில் நான் மைதானத்திற்குச் ((Playing field)செல்வேன்
அங்கு எனது தோழர்களுடன் சேர்ந்து விளையாடுவேன்.
விநோத், வின்னி, சுதா, வருண் ஆகியோரே எனது நண்பர்கள்.
மாலை நேரத்தில் நாங்கள் விளையாடுவோம். அது ஆனந்தமாக இருக்கும்.
விளையாடி முடித்து வீடு திரும்பியதும் உடலைக் கழுவிக் கொள்வேன். அதன் பிறகு இறை வழிபாடு செய்வேன்.
பின்னர் வீட்டுப் பாடங்களைச் செய்வேன். அப்பாவூம் எனக்குப் படிக்க உதவூவார்.
பின்னர் வீட்டுப் பாடங்களைச் செய்வேன். அப்பாவும் எனக்குப் படிக்க உதவுவார்.
வீட்டில் அனைவரும் சேர்ந்து இரவு உணவு உண்போம்.
உணவு உண்ட பின் சிறிது நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாக கலந்துரையாடுவோம்.
அதன் பின்னர் நித்திரைக்குச் செல்வேன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சின்னச் சின்ன வண்டி கட்டி
சிவத்த மாடு இரண்டு பூட்டி
வண்டியிலே பார மேற்றி
வாராண்டி உன் புருஷன்
கொய்யாப் பழம் பழுக்கும்
குடமல்லி பூப் பூக்கும்
சீத்தாப் பழம் பழுக்கும்
சின்னத் துரை வாசலிலே.