பாடம் 15:எங்கள் சுவர்ப்பத்திரிகை

புலிகள் 18 அடி உயரத்திற்குத் தாவும்.

- விநோத்

உலகில் ஒருவரின் பெருவிரல் அடையாளம் போல மற்றொருவருக்கு அமைவதே இல்லை.

- வினுஜா

விண்வெளிக்கு ஏவப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக். இது 1957 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது.

- சுதா

புறாக்கள் கூடு கட்டி வாழ மாட்டா. அவை பொந்துகளிலும் கட்டட இடுக்குகளிலுமே வாழும்.

- நரேன்

பூமியில் வாழ்கின்ற உயிரினங்களில் மிகவும் பெரியது நீலத் திமிங்கிலமாகும்.

- வருண்

தமிழ், இலத்தீன், ஹீப்ரூ, சமஸ்கிருதம், கிரேக்கம் ஆகிய மொழிகள் உலகில் தோன்றிய மொழிகளில் மிகவும் பழைமையானவை.

- மதன்

வைரஸ் என்றால் இலத்தீன் மொழியில் நஞ்சு என்று பொருள்படும்

- அபி

பல விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகளுக்கு நியூட்டனின் கண்டுபிடிப்புகள் உதவின. இதனால் நியூட்டனை விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்பர்.

- சிந்து

இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

- வரதன்

தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையே மிகவும் வேகமாக ஓடும். இது மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடும்

- பாபு