பாடம் 1 : பயிற்சி 2

வரவேற்பு முறைகள்:

II.பொருத்தமான சொற்களை வைத்து இடைவெளிகளை நிரப்புக.

(வணக்கம், கை குலுக்கி, நிலத்தில் வீழ்ந்து, கட்டிப்பிடித்து, முன்னே குனிந்து, முத்தமிட்டு, வாருங்கள், தலையில் கையால் தொட்டு)

(1) கோயில்களில் ............................................................... கடவுளை வணங்குவார்கள்.

(2) ஆங்கிலேயர் .........................................................................................வரவேற்பார்கள்.

(3) சில நாட்டவர்கள் கன்னத்தில் ..........................................................வரவேற்பார்கள்.

(4) பல காலம் காணாத ஒருவரைக் கண்டவுடன் சிலர் .................................... வரவேற்பார்கள்.

(5) எமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை ................................................ என்று கூறி வரவேற்போம்.

(6) தமிழ் மக்கள் இரு கைகளையும் குவித்து .......................................................... என்று கூறியும் வரவேற்பார்கள்.

(7) அரேபிய நாட்டவர்கள் சிலர்............................................................. வரவேற்பதுண்டு.

(8) யப்பானியர்கள் ................................................. வரவேற்ப்பார்கள்.