பாடம் 4 : பயிற்சி 7

VII. லகர, ழகர, ளகரச் சொற்களின் விளக்கம்:

1).இலை (மரத்தின் ஒரு பகுதி) - அதிகமான மரங்களின் இலை பச்சை நிறமாக இருக்கும்.

இளை(களைப்பு) - விரைவாக ஓடியதால் இளைத்துவிட்டேன்.

இழை (தைத்தல்) - பனை ஓலையால் பெட்டி இழைக்கலாம்.


2). வலி (நோவு) - உடலில் உள்ள காயத்தினால் வலி ஏற்பட்டது.

வளி (காற்று) - வளி மண்டலத்திலிருந்து காற்று வீசும்.

வழி (பாதை) - இலண்டன் வழிகளில் வாகனங்கள் நெருக்கமாக ஓடக் காணலாம்.


3). ஒலி (சத்தம்) - பாட்டின் ஒலி மிகவும் இனிமையாக இருந்தது.

ஒளி (வெளிச்சம்) - சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி பரவும்.

ஒழி (இல்லாமல் செய்தல்) -அந்நாட்டில் வறுமை ஒழிந்தது.


4).கிலி (பயம்) - புலியைக் கண்டதும் நண்பன் கிலி பிடித்து நின்றான்.

கிளி (ஒரு பறவை) - கிளி பேசும்.

கிழி (கிழித்தல்) - அக்கா துணியைக் கிழித்து காயத்திற்குக் கட்டினார்.


5).விலா (மார்பு எலும்பு) - விலா எலும்புகள் மனிதரின் இதயத்தைக் காக்கின்றன.

விளா (ஒருவகை மரம்)- விளா மரத்தில் இருந்து பழங்கள் விழுந்தன.

விழா (கொண்டாட்டம்)- தமிழ் விழா இலண்டனில் கொண்டாடப்பட்டது.


6).வாலை (இளம்பருவம்)- வாலைப்பருவம் இனிமையானது.

வாளை (ஒருவகை மீன்)- வாளை மீன் கடலில் வாழும்.

வாழை (மரம்) - வாழைப்பழம் மிகவும் சுவையானது.