| அரம் (ஒரு கருவி) | :- கத்தியை ............................ தீட்டலாம். |
| அறம் (தர்மம்) | :- ............................செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று கூறுவார்கள். |
| அருகு (அண்மை) | :- குளத்தின் ............................ கோயில் கட்டுவர். |
| அறுகு (ஒருவகைப் புல்) | :- பூசைக்குப் பயன்படுவது ............................ புல். |
| அரை (அரைவாசி, அரைத்தல்) | :- ஆடை இல்லா மனிதன் ............................ மனிதன் என்று கூறுவார்கள். |
| அறை (வீட்டின் ஒரு பகுதி) | :- எனது ............................ நான் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறேன். |
| கூரை (வீட்டின் மேற்பகுதி) | :- ஒவ்வொரு வீட்டிற்கும் ............................ அவசியம். |
| கூறை (மணப்பெண் அணியும் சேலை) | :- திருமணநாளில் மணப்பெண் ............................ சேலை அணிவார். |
| முருக்கு (ஒருவகை மரம்) | :- ............................ பருத்தாலும் தூணுக்கு உதவாது. |
| முறுக்கு (சிற்றுண்டி) | :- அம்மா சுவையான ............................ செய்தார். |