பாடம் 1 : வீட்டு வேலை

I) பின்வரும் வாக்கியங்களிலே, சொற்களின் கீழ்க் கோடிட்ட சொல்லை, எப்பெயர் எனக் கூறுக.

1)பெண்கள் தலையில் பூச்சூடுவர்.

.................................................................

2)யாழ்ப்பாண இரட்டைப் பனை இன்று பட்டுவிட்டது.

.................................................................

3)காலையில் உதித்து, மாலையில் சூரியன் மறையும்.

..................................................................

4)ஆடுதற் செய்கை உடல் உறுதி தரும்.

.....................................................................

5)வெள்ளைப் பசுக்கள் இரண்டு துள்ளிக் குதித்தன.

.....................................................................

6)நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி.

.................................................................

7)எனது புத்தகங்கள் அழகானவை..

.................................................................

8)அரசன் முடி சூடினான்.

..................................................................

9)நண்பன் முடி வெட்டினான்.

.....................................................................

10) எங்கள் தாய் மொழி தமிழாகும்.

.....................................................................

II) . சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி. (நல்வழி 2)

மேதினி - உலகம், பட்டாங்கு - அறிவு நூல்கள்

(1). பாட்டுக் கூறியபடி எத்தனை சாதிகள் உண்டு?

............................................................................................................................................................

(2). புலவர் கூறும் சாதிகள் எவை?

............................................................................................................................................................

(3). இட்டார் என யாரைப் புலவர் குறிக்கின்றார்?

............................................................................................................................................................

(4). இடாதார் யார்?

............................................................................................................................................................

(5). அவர் கூறும் சாதிகளைவிட வேறு சாதிகள் இருக்கிறதாகப் புலவர் கூறுகின்றாரா?

............................................................................................................................................................

III) ஆங்கிலத்தில் எழுதுக.

1)மாநகர சபை ............................................ 2) விடயம் ............................................
3) யாழ் ............................................ 4) நூல் நிலையம் ............................................
5) அடிக்கடி ............................................ 6) பெற்றோர் ............................................
7)உச்சரிப்பு ............................................ 8) அப்பப்பா ............................................
9) புலப்பெயர்வு ............................................ 10) பரிதவிப்பு ............................................

IV)மொழி பெயர்க்குக.

இலங்கை இந்து சமுத்திரத்தில் இருக்கிறது. அது மாங்காய் வடிவம் உடையது. இங்கு சிங்களம் பேசும், தமிழ் பேசும் இரு பிரிவினர் உண்டு. அவர்கள் பௌத்தம், சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைப் பின்பற்றுகிறார்கள். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

..........................................................................................................................................................................................................................

V) உங்களுடைய பெற்றோர் அல்லது பாட்டன் பாட்டி பிறந்த இடத்தைப் பற்றிய ஒளிப்படங்கள் புதினப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் என்பவற்றை A4 அளவு அல்பத்தில் ஒட்டி ஆவணப்படுத்துங்கள். (ஆசிரியர் கேட்கும் ஒரு நாளில் எல்லா மாணவர்களும் பள்ளிக்குக் கொண்டுவந்து காட்சி வையுங்கள்.)