பாடம் 15 : பயிற்சி 5

5. அடைப்புக்குறிக்குள் உள்ளவற்றுள் ஏற்ற சொல்லைத் தெரிந்து இடைவெளிகளை நிரப்புக:-

(1). நண்பன் ஒருவன் என்னைக் கைதட்டி ....................................த்தான்.

(அலை, அழை, அளை)

(2). ஓயாது .................................ப்பவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவர்.

(உலை, உழை, உளை)

(3). உப்பு நீரில் சவர்க்காரம் இலகுவில் .................................யாது.

(கரை, கறை, களை)

(4). வடை சுடுவதற்காக அம்மா உழுந்து .............................த்தார்.

(அரை, அறை, அலை)

(5). சூரியனில் இருந்து கிடைக்கும் ...................................யைப் பயன்படுத்தித் தாவரங்கள் உணவைத் தயாரிக்கின்றன.

( ஒழி, ஒளி, ஒலி)