பாடம் 15 : வீட்டுவேலை

1. சொற்களைப் பொருந்த அமைத்து வசனமாக்குக.

(1). விநாயகருக்கு / செய்வார் / ஒளவையார் / தவறாது / பூசை / ஒவ்வொருநாளும்

...........................................................................................................................

(2). இடம்பெற்ற / தொலைக்காட்சியில் / இருந்து / நிகழ்ச்சி; / சிறப்பாக

...........................................................................................................................

(3). சேர்ந்து / வெள்ளிக்கிழமை / அக்காவும் நானும் / போவோம் /கோயிலுக்குப்.

...........................................................................................................................

(4). பாராட்டுவிழாவில்/ நேற்று / ஏராளமான / நடைபெற்ற / கலந்துகொண்டனர் / மக்கள்

...........................................................................................................................

(5). நடைபெறும் / இல்ல / பாடசாலையில் / விளையாட்டுப் போட்டிக்கு / நீங்கள் / வருவீர்களா?

...........................................................................................................................

2. பின்வரும் இணை மொழிகளை வைத்து ஒவ்வோர் வசனம் எழுதுக. (1) உற்றார் உறவினர்

....................................................................................................................

(2) நன்மை தீமை

....................................................................................................................

(3) மலரும் மணமும்

....................................................................................................................

(4) வினா விடை

....................................................................................................................

(5) மேடு பள்ளம்

....................................................................................................................

3. பின்வரும் உரையாடலை வாசிக்கவும்.

தம்பி : அண்ணா, இன்று நீங்கள் என்ன கதை கூறப்போகிறீர்கள்?

அண்ணா : இன்று தமிழ் அறிஞர் ஒருவரைப் பற்றிக் கூறப்போகிறேன்.

தம்பி : யார் அவர்?

அண்ணா : அவர் தான் உலக மக்கள் அனைவராலும் போற்றப்படும் திருவள்ளுவர்.

தம்பி : அவர் என்ன செய்தார்? எங்கே பிறந்தார்?

அண்ணா : அவர் இந்தியாவில் மயிலாப்பூரில் பிறந்தார். அவர் திருக்குறள் என்னும் நீதி நூலை இயற்றினார். அந்த நூல் சிறந்த நீதிகளைக் கற்பிக்கும் நூலாகும்.

தம்பி : ‘திருக்குறள்’ என்பதன் பொருள் என்ன?

அண்ணா : ‘சிறந்த குறள் வெண்பாக்களை உடையது’ என்பது அதன் பொருள். தெய்வப் புலவராம் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகப் பொதுமறை, தமிழ் வேதம் நீதி நூல் என்று கற்று அறிந்த பல அறிஞர்களால் போற்றப்படுகிறது. திருக்குறள் இன்று வரை பதினாறுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பல மதத்தவரும் விரும்பும் ஒரு நூலாகவும் மிளிர்கின்றது.

தம்பி : அப்படியானால் அதில் எத்தனை குறள்கள் இருக்கின்றன?

அண்ணா : அதில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துக் குறள் வெண்பாக்களும் இருக்கின்றன. எனவே எல்லாமாக ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களைக் கொண்டது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.

தம்பி : எனக்கு ஒரு குறள் சொல்கிறீர்களா?

அண்ணா : பொய்யா மொழிப் புலவர் இயற்றிய திருக்குறளில் ஒரு குறளைக் கூறுகிறேன் கேள்.

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக’

தம்பி : இதன் பொருள் என்ன அண்ணா?

அண்ணா : ‘ஒருவன் கற்கத் தகுந்த நூல்களை சந்தேகம் நீங்கக் கற்க வேண்டும். கற்ற பின்பு கற்றதற்குத் தகுந்தபடி வாழ வேண்டும்’ என்பது அதன் பொருள் ஆகும்.

தம்பி : அண்ணா இவ்வளவு சிறப்பு மிக்க நூலை எனக்கு வாங்கித் தாருங்கள். நான் ஒவ்வொரு குறளாக மனப்பாடம் செய்யப் போகிறேன்.

அண்ணா : சரி, வாங்கித் தருகிறேன். நான் அக் குறள்களின் பொருளையும், அதனை விளக்குவதற்குக் கதைகளையும் சொல்லித் தருகிறேன்.

தம்பி : நன்றி அண்ணா.

விடை எழுதுக.

(1). திருவள்ளுவர் எங்கே பிறந்தார்?

............................................................................................................................

(2). அவர் எழுதிய நூலின் பெயர் என்ன?

............................................................................................................................

(3). திருக்குறளை அறிஞர்கள் எவ்வாறு போற்றுகின்றனர்?

............................................................................................................................

(4). திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

............................................................................................................................

(5). திருக்குறளில் மொத்தமாக எத்தனை குறள்கள் உள்ளன?

............................................................................................................................

(6). திருவள்ளுவரைக் குறிக்கும் வேறு இரு பெயர்கள் தருக?

............................................................................................................................

(7). ஒருவர் எப்படிப்பட்ட நூல்களைக் கற்க வேண்டும்?

............................................................................................................................ (8). நூல்களைக் கற்றவர் எவ்வாறு வாழ வேண்டும்?

............................................................................................................................

4. நீர் விரும்பிய தமிழ்ப் பெரி;யார் ஒருவரைப் பற்றி 50 சொற்களுக்குக் குறையாமல்

கட்டுரை எழுதுக.

..............................................................................................................................

5. ஆங்கிலத்தில் எழுதுக.

(1). இலக்கணம் .......................... (6). மொழிபெயர்ப்பாளர் ........................
(2). விவிலியம் ............................. (7). சிலை ....................................
(3). இலக்கியம் ............................. (8). பதிப்பாளர் .............................
(4). அச்சகம் ............................. (9). பட்டறிவு ................................
(5). சைவசமயம் ......................... (10). திறமை .................................