பாடம் 10: திருக்குறள் பொருட்பால் (Wealth)

திருவள்ளுவரால் ஆக்கப்பட்ட திருக்குறள், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. அவை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று அழைக்கப்படுகின்றன. திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம், மொத்தமாக 1330 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும், இரண்டு அடிகளை மட்டுமே உடையதாக இருக்கிறது. இந்த நூல் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருத்தல் வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிகாரம்-39:இறைமாட்சி (Grandeur of Government)

1) “படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண்

உடையான் அரசருள் ஏறு.”

(படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன். )

Warriors, worthy citizens, wealth, wise council, warm friends vantage forts are making of a leader among Kings.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2)“அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.”

(அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.)

Courage, generosity, wisdom and zeal are natural four attributes of a king

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3) “ தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.”

(காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.)

Alertness, knowledge and bravery are essential accomplishments of a ruler.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

4)“ அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா

மானம் உடையது அரசு.”

(ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.)

A brave noble king refrains from vice Full of virtue and enterprise.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5) “ இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு..”

(பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.)

The able king gets stores and guards And spends them for people’s safeguards.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

6)“ காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.”

(காண்பதற்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.)

The land prospers where the king is Easy to see, not harsh for words.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

7)“இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.”

(இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.)

The world commands and acts his phrase Who sweetly speaks and give his grace.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

8)“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப்படும்.”

(நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.)

He is the Lord of men who does Sound justice and saves his race.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

9)“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

களிகைக்கீழ்த் தங்கும் உலகு.”

(குறை கூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடை நிழலில் உலகம் தங்கும்.)

Under his shelter thrives the world Who bears remarks bitter and bold.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

10) “கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி.”

(கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்கு போன்றவன்.)

Bountiful grace, justice, care and protection of citizens are qualities of a light among rulers.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அதிகாரம்- 40: கல்வி(Education)

1) “ கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.”

(கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவறு நெறியில் நிற்கவேண்டும்.)

Learn lore worthy of learning with clarity and live by their norms of virtue.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2)“எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு.”

(எண் எனப்படும் விஞ்ஞானமும் எழுத்து எனப்படும் இலக்கியமும் சிறப்பான உயிர் கொண்டவர்களின் கண்கள் என்பர்.)

Arts and sciences are the eyes for the humans to live a life of fullness.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3) கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு

புண்உடையர் கல்லா தவர்.”

(கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே. கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.)

Learned have eyes to the mind to see the truth, vision of the ignorant is blind sore.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

4)உவப்புத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.”

(மகிழும்படியாகக் கூடிப் பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும்படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.)

The art of meeting with joy and part with thought is the gift of the learned.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5) உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.”

(செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர் முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர். கல்லாதவர் இழிந்தவர்.)

Like poor before rich they yearn. For knowledge: the low never learn.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

6)“ தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.”

(மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.)

As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

7)“யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.”

(கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும் போலவே, வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும். ஆகையால், ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?)

All lands and towns are learner’s own Why not till death learning go on?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

8)“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து.”

(ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும். )

The joy of learning in one birth Exalts man upto his seventh.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

9)“தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.”

(தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக்கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.)

The learned foster learning more On seeing the world enjoy their lore.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

10) “கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடுஅல்ல மற்றை யவை.”

(ஒருவனுக்கு அழிவு இல்லா சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்றப் பொருட்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல.)

Learning is wealth none could destroy Nothing else gives genuine joy.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்டோரியா மகாராணியார்,

கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்