1. பெயரெச்சம் : எச்சவினை பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவது.
எ-கா : ஓடிய பிள்ளை. இதில் ஓடிய என்பது பெயரெச்சம். அதைத் தீர்மானிப்பது பிள்ளை (பெயர்ச்சொல்)
2. வினையெச்சம் : எச்சவினை வினைச்சொல்லைக் கொண்டு முடிவது.
எ-கா : சிரித்து மகிழ்ந்தான். இதில் சிரித்து என்பது வினையெச்சம். அதைத் தீர்மானிப்பது மகிழ்ந்தான். (வினைச்சொல்)
பின்வருவனவற்றுள் பெயரெச்சம், வினையெச்சம் என்பவற்றை கண்டு எழுதுக.
1. அவன் மரத்திலிருந்து விழுந்த பழத்தை, எடுத்து உண்டான்.
2. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
3. கமலா பாட்டுப் பாடி மகிழ்ந்தாள்.
4. சாப்பிட்ட உணவு மிகவும் சுவையாக இருந்தது.
5. விமலன் அடம்பிடித்து நிலத்தில் விழுந்து உருண்டான்.
6. நான் அதிகாலையில் எழுந்து படித்தேன்.
7. பாரம் ஏற்றிய வண்டி மெதுவாக ஓடியது.
8. ஆடிய மயில் கூவிப் பறந்தது. பெயரெச்சம் வினையெச்சம்
பெயரெச்சம் | வினையெச்சம் | |
............................................................. | .............................................................. | |
............................................................. | ............................................................. | |

............................................................. | ............................................................. |