பாடம் 4 : பயிற்சி 2

II. ஒன்றாகச் சேர்ந்திருக்கும் சொற்கள் மூலம் அவற்றின் நேரடியான பொருளைக் குறிக்காது வேறு ஒரு கருத்தை காலம் காலமாகக் குறிப்பிட்டு வருமிடத்து அதனை மரபுத் தொடர் எனக் கூறுவார்.

உ+ம் : கண்ணாயிருத்தல்- காரியத்தில் கவனமாக இருத்தல்.


பொருத்தமான சொற் தொடரின் கீழே கோடிடுக.

1). நுனிப்புல் மேய்தல் (சுவையான உணவு அருந்தல் /மேலெழுந்த வாரியாகப் படித்தல் /ஆறுதலாக இருத்தல்)

2). தோள் கொடுத்தல் (வியாபார முறை / பொறுப்பு ஏற்றல் / கை படாது)

3). அறை கூவுதல் (வாடகைக்கு விடல் / அடித்துச்சொல்லுதல் / போருக்கு அழைத்தல்)

4). தட்டிக் கொடுத்தல் (தட்டு வழங்கல் / உற்சாகப்படுத்தல் / கையால் அடித்தல்)

5). செவி மடுத்தல் (கவனத்துடன் கேட்டல் / காதை மடித்தல் / நித்திரை கொள்ளுதல்)